Saturday, July 1, 2023

தொடரும் வலிகள் by Veena Shankar

 


தொடரும் வலிகள்


எப்போதும் வாய்ச்சண்டையில் தான் ஆரம்பிக்கும் என் பக்கத்து வீட்டின் கணவன் - மனைவி சண்டை. அன்றும் அப்படித்தான். வாய்ச்சண்டை ஆரம்பித்து முற்றிய நிலையில் மல்யுத்தம் ஆரம்பமானது. இடையே சைகையில் சண்டை வலுத்தது. கணவன், மனைவியை எதிர்த்து கை நீட்டி பேச, கை நீட்டி பேசினால் கையை முறுக்கி விடுவதாக எச்சரித்தாள் மனைவி ஆவேசத்துடன். இது எப்போதும் சண்டையின் ஊடே அவள் சொன்னாலும் கணவன் கை நீட்டி பேசும் பழக்கத்தை விடுவதாக இல்லை. அவனும் தொடர்வான். ஒரு கட்டத்தில் அவன் கையை பிடித்து கொள்வாள் மனைவியானவள். இத்தனை களேபரத்திற்கு நடுவே கணவனும் மயங்குவான். அவள் அப்படியாவது தன்னை தொடுகிறாளே என்று நினைத்து . இது தெரியாத மனைவியும் தன் வலிமை கண்டு தான் கணவன் பயப்படுகிறான் என்று நினைத்து இன்னும் தான் ஒரு படி மேலே போய் குரல் உயர்த்தி கத்துவாள்.  

என்ன ஒரு ஒற்றுமை சண்டையிடுவதில்.

தொடரும் வலிகள்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...