பள்ளிக்கூடம்
இங்கே வாழ்க்கை பாடமும் படித்ததை சொல்லவா?
தோழிகளோடு பழகிய அருமையான நாட்களை சொல்லவா?
சினிமா படங்களின் விமர்சனம் கேட்டதை சொல்லவா?
கேள்விக்கு விடை தெரியாமல் நின்றதை சொல்லவா?
ஆசிரியைக்கு சில சமயம் உதவியதை சொல்லவா?
அங்கே அறியாமை விலகி போனதை சொல்லவா?
இடைவேளையில் கேலி பேச்சுகள் அரங்கேறியதை சொல்லவா?
மைதானத்தை எனதாக்கிக் கொண்டதை சொல்லவா?
ஆசிரியர்களுக்கு வணக்கம் சொல்லி பழகிய கரங்களை நினைக்கவா?
வேலியாய் தோழிகள் சூழ குழு தலைவியாய் அமர்ந்ததை சொல்லவா?
தேர்வில் பார்த்து கூட எழுத தெரியாமல் விழித்து நின்றதை சொல்லவா?
காலையிலேயே என் உணவு தோழிகளால் களவாடப்படுவதை சொல்லவா?
மதிய வேளையில் வெறும் வயிறறுடன் இருந்ததை சொல்லவா?
அதையும் வீட்டில் சொல்லாமல் மறைத்ததை சொல்லவா?
ஆய்வாளர் வருகைக்காக நோட்டு புத்தகங்களுக்கு செய்த ஒப்பனையை சொல்லவா?
விளையாட்டு நேரத்தை எதிர்பார்த்து நின்றதை சொல்லவா?
பள்ளிபருவம் விரைவில் முடிந்ததை எண்ணி
தவித்ததை சொல்லவா?
பெற்றோரின் பிள்ளை செல்வங்களின் சோலை இந்த கல்வி சாலை
பள்ளிக்கூடமும் நம் நினைவு விட்டு நீங்கா ஓர் இடமே என்று மறைக்காமல் சொல்லவா?

அருமை சகோ
ReplyDeleteநன்றி
Deleteஇதுவும் பருவகால மற்றும் பள்ளி நினைவு தான்
ReplyDeleteஆம். உண்மை. பசுமை மாறா நினைவுகள்
DeleteThis comment has been removed by the author.
Deleteமண் வாடை
ReplyDelete---------------
கொட்டும் பணியிலே தட்ட எரிச்சு
கூத காஞ்சா உடம்பு முறுக்கேறும் மயிர் எல்லாம் வெடச்சு நிக்கும்
பொரிகடலை வித்துவருவன் பத்துகாசுக்கு பாக்கெட் ரெம்ப வாங்கிட்டு பல்லு வெளக்குறதுக்குள்ள பாதி திண்டு இருப்பேன்
கரிக்கட்ட எடுத்து ரெண்டு கடி கடுச்சு மெண்டு விரலை வச்சு நான்தெச்சு
காக்க குளிக்குளிச்சு அதே டவுறச போட்டுக்கிட்டு அரக்க பறக்க கஞ்சி குடுச்சு
ஆத்தாகிட்ட காசு வாங்கிட்டு பள்ளிக்கூடம் நான்போன வீதியில சீயான் வரும் சியம் முட்டாய் வித்துக்கிட்டு
வாட்சி ஒன்னு நான்வாங்கி மாணிக்கட்டுல கட்டிக்கிட்டு ஒய்யாரமா நடக்கையில
கன்னத்துல ஓசி ஒன்னு ஓடுவார் பாசத்துல
பள்ளிக்கூடம் போயி நின்னு ஏட்டு எடுத்து வாத்தியார் பெயரை படுச்சா
மாரியப்பன் மகன் பூமி வந்திருக்கமாட்டான்
அவன் வீடுபோயி தூக்கி வந்து ஒக்காரவைப்போம் வகுப்பறையில
மிதிவண்டி ஒன்னு கேடச்சா குரங்கு பெடல் நான் போட்டு தத்தி தத்தி ஒட்டிடுவேன் எருமைமாடு முட்டி கிழவிழுந்து முட்டி தேச்ச நத்தத்துல மண்ணல்லி நர நரைனு தெச்சிருவேன்
சனி ஞாயிறு காக்க விரட்ட போன காக்காவை வேற்றவிட்டு நான் தின்பேன் பத்து கொத்து
மாடு மேய்க்க போகையில போற வாரா வெள்ளடை காம்பை சூப்பி பால் குடிப்பேன் வலிக்காம சலிக்காம
மீசை கொஞ்சம் வந்துருச்சு பீடி எடுத்து பத்தவச்சா பாவி பய எங்க அப்பன் அன்னைக்கு தான் அந்தப்பக்கம் வருவானா சேத்தாண்டி வேஷம் போட்டு சேதச்சு புட்டன் காட்டுக்குள்ள
அங்க புடுச்ச ஓட்டம் சென்னைவரை நிக்கல
இங்கவந்து நாலு எழுத்து நான் படுச்சு முடுச்சப்ப பன்னாட்டு வேலையில பாதி உசிரு போகுதையா
---சின்னா
அருமையான short and sweet flash back brother
ReplyDelete