Monday, July 10, 2023

சிந்தனை செய் by Veena Shankar



 சிந்தனை செய்


மகளிர் தினத்திற்கான போட்டி ஒன்று அந்த காலனியில் முதல் நாள் அறிவிக்கப்பட்டு மறுநாள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. காலனியில் உள்ள பல பெண்கள் அதில் பங்கேற்றனர். போட்டிகள் பல நடத்தப்பட்டு அவ்வப்போதே வெற்றியாளர்கள் அறிவிக்கபட்டனர். விழாவின் இறுதியில் போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசு கொடுக்க போவதாக அறிவித்தார் விழா தொகுப்பாளர்.


 நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கு பெற்றிருந்ததால் அவர்களுக்குள்ளே போட்டி அதிகம் நிலவியது. ஒரே போட்டியில் அதிக பெண்கள் பங்கு பெற்றதால் பலகட்ட போட்டிகள் அவர்களுக்கு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறும் பெண்கள் மட்டுமே அடுத்த நிலைக்கு செல்வதாக அறிவிக்கப்பட்டது. இவ்வாறாக பல போட்டிகள் நடத்தப்பட, இறுதியில் பத்து பெண்கள் மதிப்பெண் அடிப்படையில் ஒரே இடத்தை பெற்றிருந்தனர் .அந்த தேர்வான பட்டியலில் நீலாவும் அடக்கம்.


அடுத்த சுற்றில் போட்டியாளர்கள் முன் மேஜை வைத்து அங்கே பத்து விளக்குகள் அடுக்கி, எண்ணெயும் திரியும் வைக்கப்பட்டிருந்தன. போட்டியாளர்கள் யார் குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிகமாக விளக்கு பொருத்துகிறார்களோ அவர்களே போட்டியில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவர் என்று சொல்லி போட்டியும் ஆரம்பிக்கப்பட்டது 


 குறித்த நேரத்திற்குள் தங்களால் முடிந்த அளவிற்கு விளக்குகளை பொருத்த, போட்டி நேரம் முடிந்த பின் ஒவ்வொரு மேஜையாக பொருத்திய விளக்குகள் கணக்கெடுக்கப்பட்டது. 


அதில் நீலா மட்டுமே அதிகபட்சமாக பத்துக்கு எட்டு விளக்குகளை பொருத்தி இருந்தாள். 

 அவளே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டாள். மேலும் இறுதி சுற்றில் எப்படி அவ்வளவு எளிதாக எட்டு விளக்குகளையும் பொருத்த முடிந்தது. மற்றவர்கள் ஐந்தை தாண்ட முடியவில்லையே? என நீலாவிடம் போட்டியை நடத்தியவர் கேட்க, நீலா சிரித்தபடியே தன் விளக்கத்தை கொடுக்க ஆரம்பித்தாள். முதலில் போட்டி என்றால் அதில் ஏதாவது சூட்சுமம் இருக்கும் என்று எனக்கு தெரியும். அதனால் விளக்கு ஏற்று ஏற்றும் முன்பே சில நொடிகள் தாமதமானாலும் பரவாயில்லை என்று நினைத்து, அந்த திரிகளின் முனையை நன்றாக பதப்படுத்தி எண்ணெயில் தோய்த்து வைத்தேன். அதனால் திரியின் முனையானது ஈரமடைந்திருக்கிறது என்பதை கண்டுபிடித்துவிட்டேன். தீப்பெட்டியை பற்றவைத்து ஒரே குச்சியில் எட்டு விளக்குகளும் பொருத்தி வைக்கும் பொழுது சரியாக மணி ஒலித்தது. ஆனால் மற்றவர்கள் சீக்கிரமாக பொருத்த வேண்டுமென்ற நோக்கத்திலேயே இருந்ததால் திரி ஈரமடைந்திருந்ததை கவனிக்கவில்லை என்று தான் கொண்ட வெற்றியின் ரகசியத்தை சொன்னாள். அவளை மற்ற அனைவரும் வெகுவாக பாராட்டினர் .


 எப்போதும் போட்டியில் சூட்சமம் இருக்கும் என்பதாக ஒரு கருத்து அவளால் சொல்லப்பட்டாலும் செய்வன திருந்தச் செய் என்ற சொல்லுக்கு ஏற்ப முதலிலேயே அந்த திரியை தன் போக்கிற்கு மாற்றி வைத்திருந்த நீலாவால் எட்டு விளக்குகளை ஒரே நேரத்தில் பொருத்த முடிந்தது.  


இந்த புத்திசாலித்தனம் இருந்திருந்தால் எவரும் போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருப்பர் என்ற உண்மையும் புலப்படுகிறது. 


 போட்டி என்பது சிந்திக்க மட்டுமே.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...