காற்றில் ஆடும் ,மழையில் நனையும்
புல்வெளியின் மத்தில் நாங்கள் மின்னும்,
வண்ணம் மாறும், மின்சாரம் கொண்டு
ஆடும் புல்வெளி.இங்கும் இடி இடிக்கும்
மழை பெய்யும் ஆனால் நாங்கள்
நனையவும் , வளரவும், வாடவும் மாட்டோம்.
மின்சார தரை விரிப்பு கண்களுக்கு
மட்டுமே விருந்து. பல நேரம் நிஜமென்று
பகட்டிற்கு மாட்டிக்கொள்ளும் மனம் சுட்டால்
மட்டுமே தெரியும் அதன் நிறம் சில நேரம்.
மின் வேலியில் மாட்டிக்கொள்ளாத
வரை தப்பிக்கும் மான் போல
துள்ளிவிளையாடு மனமே..

அழகான படம் மற்றும் கருத்து வித்யா
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete