Saturday, December 30, 2023

வானில் உழவு by Vidhya Nivash

 


வானில் யார் அது உழுவது?

  இங்கு கீழே சிந்தும் நீங்கள் இட்ட வியர்வையும், விதையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்து வானை முட்ட நிக்குது.

நிலவில் நீர் உண்டு என்று சொன்னதுமே. இங்கே விட்டதை அங்கே பிடிக்க சென்றுவிட்டீரோ. இங்கு மொத்ததில் மாறிப்போன பருவநிலை குளிரில் கூட அனல் அடிக்குது.

பார்த்து உழுங்க அங்கும் மாற்று விதை வந்து ஆசைக்காட்டின தயங்காமல் அடித்து துரத்துங்க.

இப்படிக்கு,

 கீழே அடிப்பட்டவர் பலர்.

படமும் கருத்தும் by Veena Shankar

 


தன்னவளை சொல்லால் கடிந்து தணலில் ஏற்றி சோகத்தை காட்டும் மனிதன்

நிஜம் நினைவில்

நிழல் தணலில்

நெருப்பில் குளிர் காய தேவை இரு மனங்கள் என்றது மெய்

மங்கையின் இழப்பில் இவன் இருக்க

நெருப்பும் நடனமாடி தூண்டுதே அவள் நினைவை

இருளில் மட்டுமே தெரியும் வெளிச்சம்

பகலவன் வந்ததும் மறைவதும் ஏன்?

Friday, December 29, 2023

2023 விண்மீன்கள் குழுவிற்கு நன்றி by Vidhya Nivash



இந்த குழுவில் இருக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் .கடந்த வருடம் இதே நாள் தினமும் எண்ணத்தில் வருவதை,கடந்ததை,ரசித்ததை,கைப்பேசியில் மனதில் படம்பிடித்ததை பதிவிட முடிவு எடுத்தேன்.இந்த குழுவில் பதிப்பாசிரியர் பொறுப்பு கொடுத்தவுடன் தோன்றிய எண்ணம் ஆனால் அப்போது பாதியில் நின்றது.

ஆரம்பித்த சில தினங்களில் வேதவல்லி அம்மாவின் வார்த்தைகள் கொடுத்த உற்சாகம் மேலும் ஊக்கப்படுத்தியது. முடிந்த வரை முயற்சித்தேன் ,அடைந்தேன் நிறைவு.

பல தினங்கள் விளையாட்டாக ,சில தினங்கள் அதிகமான எதிர்ப்பார்ப்புடன், சில நேரம் குழப்பமாக எழுதினேன். 

ஆனால் அதையும் படித்து ,சிலர் அதை பற்றி விளக்கம்  கேட்டது நல்ல தாக்கத்தை தந்தது.

இந்த பயணத்தை அடைய உறுதுணையாக இருந்தது .எல்லோரும் அறிந்தவரே என்னில் மூன்றுமடங்கு அவரிடம் இருந்து பதிவு வந்தது.அதனாலே இந்த வெற்றியை அடைய முடிந்தது. போகும் பயணத்தில் சரியான துணையிருந்தால் எதுவும் சாத்தியமே. நன்றி வீணா உங்களுடைய நேரத்தை ஒதுக்கி ஒவ்வொரு நாளும் என்னை ஊக்கப்படுத்திய உங்கள் வார்த்தைகளுக்கு..பல நேரம் எழுதியது ஒன்று ஒவ்வொருவரின் பார்வைக்கு ஏற்ப அது பல வடிவங்கள் எடுத்தது. ஒரு படைப்பாளியாக அது பல பிறப்புக்கள் எடுத்தது மிக்க மகிழ்ச்சி,பூரிப்பை தந்தது.

எழுத தொடங்கியுடன் இயற்கையின் ரசிக்கையாய் மாறி எதை பார்த்தாலும் படம்பிடித்து எழுத தோன்றுது.ஒவ்வொருவருக்குள்ளும் உறங்கும் கலைஞனை அடையாளம் காண ஒரு முகவரி தேவை.அந்த முகவரி விண்மீன்களே .

வேதவல்லி அம்மா மட்டும் அல்ல அவருடைய மகளும் பல நேரத்தில் சோர்வு தட்டும் போது ஒரு தட்டு தட்டும்  அவருடைய குறுஞ்செய்தி. 

மேலும் இந்த பயணம் தொடர,எழுத்துக்கு  அடையாளம்,ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.

இந்த மாதிரி ஒரு  நல்ல வாய்ப்பை தந்து,நேரம் கிடைக்கும் போது உங்களுடைய வார்த்தைகளால் மட்டும் அல்லாமல் உங்களுக்கிடைக்கும் வாய்ப்பையும் தந்து அழகு பார்க்கும்  அகிலாவிற்கு மிக்க நன்றி.

அகிலா மற்றும் கீதாவிற்கு வேண்டுகோள்,

நீங்கள் அடிக்கடி போடும் சமூக வலைத்தள பதிவுகளையும் ,நீங்கள் செய்யும் சமூக சேவைகளையும் இன்னும் கொஞ்சம் பொதுநலத்தை சுயநலமாக வெளியிட்டால் பலர் மேலும் வெளிவர வாய்ப்பு இருக்கு .

படமும் கருத்தும் by Veena Shankar



அம்பு எய்தி மரணம் தழுவியதால் காவியமானதா?


சுதந்திரமாய் பறக்க மறுக்கப்பட்டதால் 

சின்னமானதா?


ரசித்தவனின் கண்ணில் பட்டதால் 

 ஓவியமானதா?


 காரணம் அறிய நான்


என் நிலைக்கு விளக்கம் தேட வேண்டாம், பொல்லாத மனிதர்கள் வாழும் இந்த உலகில் என்றது வண்ணத்துப்பூச்சி


இறைவன் கொடுத்த சுதந்திரத்தை பறித்து விட்ட வேட்டைக்காரன்

2023 க்கு நன்றி - ஆத்(ன்)மீகம் by Vidhya Nivash

 


ஆறாவதாக ஆன்மீகம் அல்ல ஆத்மீகம் 

முன்பு சொன்ன ஐந்தையும் ,ஆத்மீக அன்புடன் கடைப்பிடிக்க ஒரு  நல்ல மாற்றத்தை பார்க்க முடியும்.

அது என்ன ஆத்மீக அன்பு ,

உன்னை நீ அறிய எது வேண்டும்? எது தடை?புறமகழ்ச்சியை விட அகமகழ்ச்சி அடைந்து பாருங்க.உன்னை நேசி அதேபோல் பிறரையும் நேசி. இதுவே எல்லா ஆன்மீகமும் சொல்வது.

ஒர் உயிரை சக உயிரிடம் இருந்து பிரித்து பார்க்கும் அதுவும் தொழில்ரீதியாக பார்க்கும் ஆன்மீகம் வேண்டாம்.பகுத்தறிவாளர்கள் சொன்னதே அறிவியல் ரீதியாக சொன்னதை சிந்தியுங்க, உங்களை முடக்கி போடும் ஆன்மீகத்தை, மூடநம்பிக்கையை சிந்தித்து செயல்படுவது உங்கள் கையிலேயே.

சுயஒழுக்கத்தை கடைப்பிடிக்க உதவும் கருவியே ஆத் (ன்)மீகம் .

Thursday, December 28, 2023

தூரிகையும் தாரகையும் by Veena Shankar

 


தூரிகையும் துயிலாத தாரகையும்


 தூரிகை துயில் கொண்டால் சித்திரம் இல்லை

தாரகை துயில் கொண்டால் சரித்திரம் இல்லை

 சித்திரத்தை கைப்பற்றியது யார்?

வாழ்க்கை வழியில் பயணிக்கும் போது வலியில்லாமல் கடக்க முடியாது


தேவைப்படும் நேரத்தில் மருந்தும் ஆங்கே கொடுக்கப்படும் வாழ்க்கை துணையால்

ஆசை எதன் மீது?

 சித்திரத்தின் மீதா?

சித்திரத்தை வரைபவர் மீது?


துயில்வது யார்?

ஆசைக் கணவனா?

தூரிகையா?

 மனதை தேற்றும் வகையில் ஒன்று நித்திரையாய்

மற்றொன்று சித்திரமாய்

தரமில்லாத எதுவும் நீடிப்பதில்லை அதன் பயணத்தில்

தூரிகை ஏந்திய காரிகை தன் ஓவியத்தின் கவனத்தை துறந்தாள் துணையின் உறக்கம் கலையாமல் காக்க

2023க்கு நன்றி - தொழில் by Vidhya Nivash

 


ஐந்தாவதாக தொழில்

செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். பசியை தீர்க்க ஒவ்வொருவரும் ஒன்றில் முனைப்புடன் இருக்க வேண்டிய அவசியம்.உன்னை எடுத்துக்காட்டும் கருவி மட்டுமே அது. அதிலே மூழ்காமல் இருப்பதே திறமை. 

இல்லத்தரசிகளிடம் வருவோம்.பல தொழில்கலைகளை கற்று எல்லாம் அச்சிடப்பட்ட தாள்களாக பீரோவில் பத்திரமாக இருக்கு.தேவைப்படும் போது பயன்பட.இந்த கலாச்சாரம் இன்று வெகுவாக மாறி வருகிறது.

நம் தொழில் என்ன? உன்னை எடுத்துக்காட்டும் கருவி எது? அதை தேடி அடைந்தீரா? ஆம் தினமும் நாம் செய்யும் தொழில்/ சேவை மகத்தானது தான் அதற்கிடையிலும் நமக்கானதை தேடி அதையும் மேம்படுத்த நேரம் ஒதுக்கலாமே. 

 

Wednesday, December 27, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

  


இன்றைய முதல் நாளைய வரவு


அன்று ஊர்ந்தது இன்று பறந்தது


அன்று உடல் சுருக்கியது

இன்று இறக்கை விரித்தது


அன்று உடல் பாரமாய்

இன்று காற்றில் இலகுவாய்


அன்று பிடிக்க முடிந்தது

இன்று எட்டாகனியானது 


அன்று கூட்டில் முடங்கியது

இன்று தோட்டத்தில் சுற்றியது


அன்று காண்போருக்கு

 சிறுமையானது

இன்று அழகால் பெருமையானது


தோற்றத்தில் இல்லை வெற்றி 

மாற்றத்தில் கொள்வதே வெற்றி

2023 க்கு நன்றி -அறிவு by Vidhya Nivash

 


நான்காவது அறிவு

தினமும் நாம் செய்யும் சின்ன சின்ன செயல்களையும் சிந்தித்து பாருங்க.பெரும்பாலும் சொல்லப்பட்டது அதுவே வழக்கமாக மாறிவிட்டது.இங்கே குழந்தையை கவனிக்க வேண்டும்.நாம் சொல்லும் ஒவ்வொரு செயலுக்கும் பல கேள்விகளை தொடுக்கும். ஏன், எதற்கு என்று யோசித்துப் பார்த்தால் பதில் யாரோ சொன்னது.அறிவுபூர்வமாக சிந்திக்கும் குழந்தை போல் நாமும் கொஞ்சம் மாறினால் இந்த சமூகம் மேலும் மாறுமோ, வளருமோ. 

தினமும் புத்தகம் படிக்க,  நம் சிந்தனையை தூண்டும் செயலுக்கு நேரம் ஒதுக்கலாமே. 

Tuesday, December 26, 2023

2023 க்கு நன்றி- உறவுகள் by Vidhya Nivash

 


மூன்றாவது உறவுகள். 

நம்மை சுற்றி இருக்கும் உறவுகளே.நம்மை காட்டும் கண்ணாடி.அதை கையாளும் விதத்திலே அது  நம்மை பிரதிபலிக்கும்.எதை கொடுக்கிறாயோ அதுவே திரும்ப கிடைக்கும்.ஒரு முறை நொறுங்கினால் சரிசெய்யலாம். ஆனாலும் அந்த வடுவை அழிக்க முடியாது.

நல்ல உறவுகளின் தோள் இருந்தால் விண்ணையும் தொடலாம்.அது புதிதாக ஒவ்வொரு வருடமும் நாம் கடக்கும் பாதையில் கிடைக்கும் பொக்கிஷம் .எண்ணிக்கைக்கு மட்டும் இல்லாமல் தக்க சமயத்தில் நல்ல உறவு இருந்தால் மனம் வலுப்பெறும்.அதிலும் முகமறியா உறவு கிடைத்தால் பாக்கியமே.

படமும் கருத்தும் by Veena Shankar

  


தனித்திருப்பதும் அழகே!


ஒற்றை திலகமும்

ஒருகல் முக்குத்தியும்

ஒரு கண்ணின் அழகும்

விழியின் பார்வையும்

ஒர் திசை கோணமும்


தேடுவது எவரை?


தனிமை என்னும் சிகரத்தை


 நேற்றிபொட்டின் சிவப்பும்

விழியின் வனப்பும்

பார்வையின் ரசிப்பும்

புருவத்தின் அழைப்பும்

இமைகளின் துடிப்பும்

நாசியின் சுவாசமும்

அதில் கொண்ட மூக்குத்தியும்


கொள்ளை கொள்ள செய்கிறது

என் விழிகளை


உன் பெண்மையின் அழகை ரசிக்க சொல்லி


விழியின் தேடல்


மணவாளனுக்கான காதலா?


மழலைக்கான தேடலா?


மகிழ்விற்கான மடலா?


மருத்துவத்திற்காக அச்சமா?


மகத்துவம் பெறுவதற்கான வாய்ப்பா ?


மறப்பதற்கான காரணமா?


மறுத்ததின் பயனாய் ஏமாற்றமா?


மாறுதலுக்கான வழியா?


மன்னிப்பு கோருவதற்கான பார்வையா?


மாலையை வரவேற்பதற்கான சுடரா?


மனக்குமுறலின் வெளிப்பாடா?


மலரின் தேடலும் எதுவோ?


மங்கையின் தேடலும் வசப்படுமோ?


மறைந்து நோக்கினால் நம்


மனம் தெளிவும் கொள்ளுமோ?

Monday, December 25, 2023

படமும் கருத்தும் by Veena Shankar



 என் அக வலிகளை

 மறக்க எண்ணி

 சாலையில் நான் 

 பயணிக்க,  

என்னோடு போட்டி

 போட்டு கொண்டு

தானும் முன் செல்ல

வழி தோறும் இந்த

 வான் வரிகள் என் சிந்தையினுள்ளே 

கலந்து என்னை 

அதற்கு சிறையாக்கி

 ரசிகையாக்கி  

 என்னிடம்

 அடைப்பட்டிருந்த  

வலிகளை எட்ட  

வைத்து , 

தன் அழகால்  

என்னை கவர

அதை கண்டு நான்

 மிரட்சி கொள்ள

 வைத்ததின் மாயமென்ன?



பெரும் முயற்சியின் பலனாய் 

கோடு போட்டு சாலை 

அமைத்த மனிதனின் வெற்றி பூமியில்


ஏதுமில்லாமல் பிளவுபட்ட மேகங்களின் அணிவகுப்பு நீலவானில்


 சலனமில்லாமல் 

 நேர்த்தியாய், 

மனிதனுக்கு சவாலாய் மாறியதன் காரணமென்ன?


வலிகளையும் வரமாய்

மாற்றும் சக்தி ஒருவனுக்கே!

அவன் ஒருவனுக்கே!

அவனே இயற்கை!

2023 க்கு நன்றி - செல்வம் by Vidhya Nivash

 


நாம் கவனிக்க வேண்டிய இரண்டாவது செல்வம். 

நாம் ஈட்டும் பணத்தையும், பொருளையும் தாண்டி பெரும் செல்வமே சிறப்பு. எப்படியாக தினமும் செய்யும் செயல் மூலம்  குறிப்பாக முகமறியா  பல உள்ளங்களில் பூக்கும் மகிழ்ச்சியே மிகப்பெரிய செல்வம்.எதை கொண்டும் அழிக்க முடியாத கல்வி செல்வம் அதை நாம் பிறருக்கு கொடுக்க கொடுக்க வளரும் அதுவே நிலையானது.பொருளீட்டுதல் முடியாவிடிலும் பிறர் தன் உள்ளதே இடம் பிடிப்பதும் அழியா செல்வமே.

Sunday, December 24, 2023

நீ யார் by Veena Shankar

 


நீ யார்?


எதில் உனை இட்டாலும் வேகமாய் கரைந்தாய்


என் மனதில் கொள்ளை கொண்டு என்னுள்ளே கலந்தாய்


எண்ணத்தில் அறிமுகமாகி வித்தகனாய் மாறினாய்


பலர் கை வண்ணத்தில் சிறப்பாய் மிளிர்ந்தாய் 


உன்னை நான் சூறையாட தீர்ந்தும் போனாய்


என் செயலை பிறர் அறியாமல் நடக்கவும் செய்தாய்


சலனமில்லாத என்னை தேவையால் கவர வைத்தாய்


நானும் நீயும் செய்த செயலால் என் மனதை உடையவும் செய்தாய்


முதுமையில் என்னுடனேயே பிரியமாய் சேர்ந்தாய்


பதட்டமாய் என்னுள் ஏற்ற இறக்கம் கொண்டாய்


நீ யார் என்பது எனக்கு தெரிந்தாலும்


உன்னை யாரென்று கண்டுபிடிக்க அடுத்தவருக்கு அவகாசமும் தேவை தானே?


அவசியமும் உண்டே!


நீ யார் என்ற உண்மையை பிறரிடம் கண்டுபிடிக்க சொல்வோமா?

2023 க்கு நன்றி -ஆரோக்கியம் by Vidhya Nivash



 இந்த வருடத்தின் கடைசி வாரத்தில் இருக்கிறோம்.கேட்டதில் பிடித்தது.ஒவ்வொரு வருடத்தையும் ஆவணப்படுத்தி பாருங்க. கண்டிப்பாக உங்கள் வளர்ச்சிக்கு உதவும்.அதை ஆறாக பிரித்து பாருங்க. எதில் தேக்கம்,வளர்ச்சி,முயற்சி வேண்டும் என்று தெரியும்.கொஞ்சம் சுயநலமாக நாம் செய்யும் பொதுநலத்தை சுயநல வளர்ச்சி என்று சொல்லுவதில் தவறில்லை.

முதலில் ஆரோக்கியம்.

சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாத மாதிரி.உடல் அதன் ஆரோக்கியம் குறிப்பாக மனம்.அதற்காக சில மணிதுளிகளை ஒதுக்குங்க. அது எந்த விதத்தில் வேண்டுமானலும் இருக்கலாம்.அதுவே உங்களுக்கும் உங்களை சார்ந்தவருக்கும் மகிழ்ச்சி,மிகப்பெரிய சொத்து.

சரிபாதி by Vidhya Nivash

 


என்னில் பாதியாய் புகுந்த நீ முழுதுமாக கடத்திக் கொண்டாய்.

சரிபாதி போய் முழுதுமாக நீயே நிறைந்து போனாய்.

காலில் பூட்டிய கொலுசு போல் என் மனதை உன் பார்வையில் பூட்டி விட்டாயே. 

இங்கே பூட்டுகள் இல்லை ஆனாலும் மனங்கள் மட்டும் ஒன்றை ஒன்று பூட்டிக்கொண்டு தவிக்கிறதே. 

நீ நீயாக இருக்கும் போதும் நான் நானாக இருக்கும் போதும் மட்டுமே  நாம் என்ற உறவு வளர்கிறதே. 

ஒன்றை ஒன்று சார்ந்தும், தனித்தும்,புரிந்தும், விட்டுக்கொடுத்தும் சரிபாதியாக நிற்க தொடரும் இந்த பயணம் இனிமையாய் . 

நாம் இருவர் நமக்கு இருவர்.

நாம் இருவர் நமக்கு ஒருவர்.

நாம் இருவர் எதற்கு  ஒருவர்...நாமே

 சரிபாதியாக மோதிக்கொள்ள நேரமில்லையே.



இணைந்த கால்கள் by Veena Shankar

 


 இணைந்த கால்கள் சடங்கின் போது மட்டுமே தானோ?

 சரித்திரம் படைக்க ஒன்றிணைந்த கால்கள் வார்த்தைகளால்

சரிந்து போவதேன் 


துணிந்து முன் வைக்கும் கால்கள் பாதியிலேயே துவண்டு நிற்பதேன்


மூன்று முடிச்சு இட்ட பின் அதை அவிழ்க்க முயல் வேகத்தில் முடிவேடுப்பதேன்


பெருமை கொள்ள அல்ல திருமணம் பொறுமையோடு வாழவே என்பதை மறப்பதேன்


தாம்பத்தியத்தில் பல காரணம் காட்டி அனுசரித்து போக மறுப்பதேன்


மனமும் உடலும் சேர்ந்த பின் அந்த பந்தத்தை சிதைப்பதேன்


அறியாத பல கேள்விகள் இருக்க அருவி போல் கொட்டும் நீராக கடலில் கலப்பதேன்


இதுவும் வாழ்க்கை தான் என்று உணராமல் வசந்தத்தை கடப்பதேன்


அறுசுவை எல்லாமும் அவசியம் உளமார உண்டு மகிழ


தனியே சிந்திப்பதை விடுத்து துணையோடு கரம் சேர்த்து ஆலோசிக்க முனையுங்கள்


முதிர்வு கொள்ளும் மனமும் இளமையிலேயே


மனம் செரா திருமணம் மணம் சேர்க்குமா?

மறுமணத்திற்கு தான் சிரம் ஆட்டுமா?

Saturday, December 23, 2023

பெண்ணே by Vidhya Nivash



கண்ணை மூடிய உடன் பறக்கும் எண்ணங்கள் அதை விரல் கொண்டு மீட்டுவது யார்...அதை மூட்டாமல் இருந்தால் பிறக்கும் எண்ண சித்திரம்
 பல.

எப்பேர்பட்ட கற்பனை தன்னை ஒரு இயந்திரமாக்கி அது ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில் தன்னை தானே படிக்கும் பெண்ணின் மனம்.

மூளையும் மனமும் முட்டி மோதிக்கொள்ள பெண்ணெண்ற புத்தகத்தில் விடை தேடும் விரல்கள்.

ஒரு பக்கம் உளிக்கொண்டு செதுக்க மறுப்பக்கம் எழுது கோல் கொண்டு உருவாகும் வரலாறு.

ஓரே நேரத்தில் இரு படைப்பு ஒன்று வலியில் பிறக்கும்  மற்றொன்று கிடைக்கும் வழியில்  பிறக்கும்.

புத்தகம் என்னும் பெண்ணும் by Veena Shankar

 


பலமுறை புரட்டி படித்தாலும் புரியாத

 புதிர் புவியில் இந்த பெண் எனும் புத்தகம்

 புரட்ட தெரியாதவனுக்கு புதிரே இவள்

 புரட்டியவனுக்கு புதினமே இவள்

 கோர்வையான எழுத்துக்களை கொண்ட

 புத்தகத்தையும் தன்

 பார்வையாலே படித்து புரிந்து

 கொள்வாள் பெண் என்னும் பராசக்தி

அவளே சக்தி கொண்டவனுக்கும்

புவியும் ஆள்வாள்

பழியும் ஏற்பாள்

பகட்டும் புரிவாள் 

பாட்டும் பயில்வாள் 

படியும் தாண்டுவாள்

பாடமும் சொல்வாள்

பரியும் ஏறுவாள்

பாரத்தையும் சுமப்பாள் 

பாவமும் அடைவாள்

பதியையும் காப்பாள்

பஞ்சமும் ஒழிப்பாள்

பஞ்சனையும் பகிர்வாள்

பாக்கள் இசைப்பாள்

பரிவை காட்டுவாள்

பட்டத்தை கொள்வாள்

பதக்கத்தை வெல்வாள்

பதட்டத்தை அறிவாள்

பங்கத்தை தவிர்ப்பாள் 

பிறரை ஈர்ப்பாள் 

போரும் புரிவாள்

பறப்பதை பிடிப்பாள்

பழமையும் துறப்பாள்

புதுமையையும் புகுத்துவாள்


இந்த புத்தகம் எனும் பெண்ணும்


பெண் என்னும் புத்தகத்தை மனதால் புரட்டியவர் மட்டுமே அடுத்த பக்கத்திற்கு நகர்வர்


புரியாதவருக்கு அவளே

முதல் பக்கமும் கடைசி பக்கமாய் இருப்பாள்

Thursday, December 21, 2023

உருகுதே by Veena Shankar

 


உருக உருக தொண்டையில் பதமாய் இறங்கும் 


குளிர குளிர சுவைக்க கடின மனமும் இறங்கும்


அள்ளி அள்ளி 

பருக முடியாமல் விரல்கள் தவிக்கும்


கிள்ளி கிள்ளி நிறைய கொடுத்தாலும் ஆசை 

பரிதவிக்கும்


தள்ளி தள்ளி சென்றாலும் நம்மை வீம்பாக இழுக்கும்


சொல்லி சொல்லி மறைவாய் நம்மை லயிக்க வைக்கும்


பள்ளி பள்ளியாய் விற்றது போய் வீடு

 நோக்கி படையெடுக்கும்


புள்ளி புள்ளியாய் காய் நகர்த்த மகிழ்ச்சி கோலம் காட்டும் 


மெல்ல மெல்ல உதட்டில் வைத்து சுவைக்க தூண்டும் 


மொத்தத்தில் நம்மை அடிமையாக்கும்

சாவி கொத்து by Vidhya Nivash

 


சாவி கொத்து இன்றும் அன்றும் சாவி சொன்னது தனியாக இருந்தால் தொலைந்து போவேன் என்று பூட்டி விட்டீர்களா..எனது கையில்லாமல் எப்படி போவீர் வீட்டிற்குள். அப்படியிருக்க பூட்டை திறக்கும் எனக்கெற்கு பூட்டு.இன்று ஒரே சாவி எனக்கு துணையில்லை.அதுவும் பொத்தான் பல கையில்..எங்கிருந்து வேணுமுனாலும் திறக்க.

அன்றோ நாங்கள் ஓரு பெரிய வட்டம் .ரகம் வாரியாக ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு தொக்குவோம். அதிகமாக பூட்டு கிடையாது எங்களுக்கு..இரும்பு மட்டுமே எங்கள் ஆக்கப் பொருள்.பின்பு வசதிக்கேற்ப மாறினோம்.

 ஒன்று சாவி கொத்து ? மற்றொன்று?


Wednesday, December 20, 2023

கருமை by Vidhya Nivash

 


சின்ன சின்ன வட்டங்கள் சேர்ந்து வந்த வட்டம். வட்டத்தை வாட்டமாக மாற்றிய புள்ளிகள். வெறும் புள்ளிகள் சின்னது பெரிசு அதை அடுக்கிய விதமே கலை. வண்ண புள்ளிகள் அதுவும் சரியான கூட்டு. இதை மேலும் அழகுபடுத்திய கருமை திடமான நிறம்.

கருமை வெறுமையல்ல தன்னில் விழுவதை உள்வாங்கும்.பல வண்ணங்களின் மத்தில் ஈர்க்கும் வண்ணம்.அதுவே ஆக்கத்தின் கருவி.கருமை எதிர்மறை அல்ல மறை..பொது மறை. 


  

இந்த வார தலைப்பு எழுதுகோல் by Veena Shankar

 


தன்னை பயன்படுத்துவோருக்காக தன் கருத்த உடலை கரியாக்கி கொண்டவன்


தன் பின்னால் இருப்பவர் முன்னேற தன் அலகை அழகாய் ஒடித்து கொள்ள முயன்றவன் அதில் வெற்றியும் கண்டான்.


தியாகம் பேசப்படாவிட்டாலும் அதை செய்பவனுக்கு உள்ளூர பெருமையே! மகிழ்ச்சியே!


தன்னிலையில் இருந்தால் வரையலாம் சித்திரம்

நிலையிழந்தால் சீவி கரைத்த பொருளில் கொள்ளலாம் ஓவியக்கலை


எதுவும் உண்டு நம் கையில்

படைப்பாளியின் சிந்தனையில்


பயன்படும் முன்பே கொண்ட மரணம், உபயோகிப்பவரிடம் கையாளும் திறமை இல்லாததால், நடந்த சோகம்

Tuesday, December 19, 2023

வான் ஓவியம் by Vidhya Nivash

 


இன்றைய  வான் ஓவியம் சொல்லும் செதி.. 

அலை அலையாக போகும் கடலில் காலையில் மூழ்க தோணுதே.  

பெரிய விமானம் விட்டு சென்ற புகை மண்டலமோ.

நீண்ட கூந்தலை விரித்து கடலில்

 நீந்தும் பெண்ணோ.

 பஞ்சு மிட்டாயை யாரோ காற்றில் தூவி சென்றனரோ.

வரி வரியாய் ஓடும் நீல மணற்

 பாலைவனமோ..

கண்ணை கடத்திய காட்சி அலைகள்.


படமும் கருத்தும் by Veena Shankar

 


எதையும் அணைக்க தெரியாத கைகள்

 இதை அணைத்தது இரவை

 கழிப்பதற்காக

கரங்கள் இரண்டு காணாது

இறுகப் பற்ற

நித்திரையை துறக்க வைப்பதும் நீயே!


நித்திரை கொள்ள வைப்பதும் நீயே!


உடையவரை வருட வைப்பதும் நீயே!


அதனால் திறன் இழப்பதும் நீயே!


வாடிய மனங்களுக்கு ஆறுதலும் நீயே!


குழம்பும் தருணத்தில் வீசப்படுவதும்

 நீயே!


பற்றில்லாமல் பற்றிக் கொண்டாலும்

 நீயே நீயே!


என் இரவை போக்க உறவாக வந்தவனும் நீயே! நீயே!


கடந்த பாதையின் நினைவோடு என்னை கடக்க செய்வதும் நீயே!


மனிதம் தெரியாவிட்டாலும் என் மனதை அறிந்தவனும் நீயே!

அழித்தவனும் நீயே!

இணைப்பு- பிரிவு by Vidhya Nivash

 


இணைப்போடு பிறந்து துண்டிக்கப்படுகிறோம் . இந்த உலகில் பல அனுபவங்களை பெற.ஆனாலும் உடலால் துண்டிக்கப்பட்ட நாம் உறவால், உணர்வால் இணைக்கப்படுகிறோம்.

துண்டிக்கப்பட்டு தனித்து நிற்கவே மனிதனை தவிர அனைத்து ஜீவராசிகளும்  பழக்கப்படுகிறது.

இணைப்பு - பிரிவு உறவுகளில், பலநிலைகளில்... உளவியல் ரீதியாக பல பிரிவுகள் இருக்கு இணைப்பில்..ஒரு காலகட்டத்தில் தனிமை,பிரிவு இதை அனைவரும் சந்திக்க நேரிடும்.முதுமையில் துணையை பிரியும் போது பலர் நாட்களை எண்ண தொடங்குகின்றனர்.ஐம்பது,அறுபது வருட பிணைப்பு அதன் பின்? 

பாலுமகேந்திராவின் அம்மா பழசு நல்ல முடிவு-வருங்காலத்தின் கணிப்பு. காபி காரம் இனிப்பு புதுசு ஆனா  பழசு.அதுவே தொடருது இன்றும்.

 பிள்ளைகளின் பிரிவு ஒருவிதமான தனிமை ,வெற்றிடத்தை உண்டாக்கும். 

எப்படி கையாளுவது! பார்த்தது, கேட்டதில் பிடித்தது. வாழ் ஒவ்வொரு நொடியிலும் நிகழ்காலத்தில், இது தான் நமக்கான நேரம் விட்டதை ரசிக்க, சாதிக்க, பறக்க .ஒரு புதுப்பிறவி. மாங்காய்,உப்பு பார்த்தால் நாவில் உமிழ்நீர் சுரப்பதே வாழ்க்கை.உமிழ்நீர் சுரப்பது நிற்காதே.பிரிவுக்கு பின் மீண்டும் இணைப்பை தேடி அலைந்தால் இழப்பே.புது விடியல் காத்திருக்கு.பயணங்கள் தொடர..

Monday, December 18, 2023

கடல் விண்மீன் by Vidhya Nivash

 

 

இயற்கையின் அதிசயம் கடல்விண்மீன்,உடுமீன்,நட்சத்திர மீன்,முட்தோலிகள். 

நட்சத்திர வடிவம் கொண்டேன். வாழ்வது கடல் அங்கே இருந்து கடத்தப்பட்டு அலங்கார பெட்டியில் பல கைகள் தொட்டு பார்க்க. 

 பல வண்ண கோலங்கள் உடலெங்கும். 

வெளிபுறத்தில் கல் உள்ளே மென்மை ஆனால் மெதுவாக தொட்ட கை ஆச்சரியமாக விலகும்.

காற்றில் அசைவது போல் தண்ணீரில் மிதக்கிறேன்,அடி வைத்து நகர்வேன். 

கல் போன்ற மேனி ,அழகான வடிவம்,மெல்ல நகரும் உடல்,பல வண்ணம் ,முள் போன்ற விரல்கள்,ஐந்து கண்கள்,பற்கள் இல்லா வாய் எத்தனை அதிசயம் .

படமும் கருத்தும் by Veena Shankar

 


அருகிலுள்ள விளக்கும் 

வானத்தின் நிலவும்


 புரிதலாய் இருக்கும் வேளையில்


தன் அறியாமையால் தொலைத்து

 விட்ட


 வாழ்வை 

எதிர்த்து போராட 


வழியும் தேவை 

வெளிச்சமும் தேவை

அகவையும் தேவை


அனுபவம் பேசிய மனிதரை

 தவிர்த்ததால்

 தள்ளப்பட்டாள் 


தன் பயணத்தையும் தொலைத்தாள் 


தனிமையும் வாழ்வை மாற்றுமோ?


தரணியை ஆளுமோ?


பொறுக்கட்டும் காலமும் அவள்

 இளமையும்


அவள் தன் வருங்காலத்தை

 எதிர்கொள்ள


இருட்டின் பரிசும் வேண்டுமே


வெளிச்சம் தரும் பாதையை நோக்கி

Saturday, December 16, 2023

இந்த வார தலைப்பு"எழுதுகோல்" by Vidhya Nivash


 கோபத்தில் உடைத்தாலும் வேகத்தில் உடைத்தாலும் மீண்டும் வளர்வேன்.

பல நேரத்தில் கூர்மையாகவும் சில நேரத்தில் மொக்கையானலும் நானே நிலைப்பேன்.

பழக எளியவன் எளிதில் கிடைப்பதால் அதிகமாக அலைக்கழிக்க படுபவன்.

எதை கொண்டும் எனை உயிர்ப்பிக்க முடியும்.

கையாளும் விதத்தில் பல படைப்புகளையும், பல பிறப்புகளையும் தருவேன். 

என்னை கடன்பெற்ற பலரும் திருப்பி தருவதில்லை ,தொலைத்தும் விடுகின்றனர்.

பெத்தி பெத்தி வளர்க்க பட்ட நான் கடைசியில் இருப்பது சிலரின் அலங்கார அறையிலும்,சிலரின் குப்பை தொட்டியிலும்..

எனை பயன்படுத்த நான் வளர்வேன், குட்டிப்போடுவேன்.

ஒன்று எழுதுகோல் மற்றொன்று என்ன?

சாதனையிலும் வேதனை by Veena Shankar

 


சாதனையிலும் வேதனை


" உன்னை ஓடி பிடிக்கிற வயசாடா எனக்கு? பாட்டி இல்லாததால நீ ரொம்ப சேட்டை பண்ற! ஓடாதே! நில்! நில்! நான் கொடுக்கிறத சாப்பிடாமல் அது வேணும் இது வேணும்ன்னு அடம்பிடிக்கிற? அதுவுமில்லாமல் எனக்கு தெரியாமல் சமையல் கட்டுப்பக்கம் வந்து சாப்பிடுகிற. உன்னை நான் ஒரு நாள் கையும் களவுமாக கண்டிப்பா பிடிப்பேன். நான், நீ இருக்கிற பக்கம் வந்தால் நீ எதிர் பக்கம் போகிற? நான் ஒரு எட்டு வைத்தால் நீ பத்து எட்டு வைத்து ஓடுற? இந்த வயதில் உன்னோடு விளையாட என்னால முடியாது . "


" இத்தனை நாள் நானும் உன்னை விட்டு பிடிச்சேன் . ஆனால் நீ அடங்குற மாதிரி தெரியல. என்னிடம் வராமல் ஓடுவது, நான் கொடுக்கும் தின்பண்டத்தை சிந்தி சிதறி அடுத்த அறைகளுக்கு கொண்டு சென்று மறைவா தின்பது , போதாக்குறைக்கு என் ரூமிற்கு போய் முக்கிய ஆவணங்களை நோட்டமிடறது என்று நீ செய்யும் எல்லா சேஷ்டைகளையும் இனி என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. "


" வெளியில் மழையாய் இருப்பதால் இங்கேயே விளையாடு என்று நான் வாசல் கதவை பூட்டி வைக்கிறேன் . ஆனால் நீயோ, மெதுவாக செல்வது எனக்கு தெரியாது என நினைச்சியா? உன் கால் தடத்தை வைத்து நான் கண்டுபிடிச்சிட்டேன். நான் எதிரே வரும்போது ஒன்றும் தெரியாதவன் போல் இருந்து விடுகிற" என பெரியசாமி பேசிக்கொண்டிருப்பதை கேட்டுக் கொண்டே ஆபிஸ் முடித்து வீட்டிற்குள்ளேயே வந்தான் அவர் மகன் ரவி. 


 தன் எண்பது வயது அப்பா யாரிடம் பேசுகிறார்? யாரோ வந்திருக்கிறார்கள் போல என்று நினைத்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைய , "வா! ரவி! வா ! கரெக்டா வந்துட்டே. நீயும் மருமகளும் இல்லாத நேரத்துல எனக்கு பொழுதுபோக்காய் இவன் இருக்கட்டும் என்று நினைச்சா இவன் ஓவரா சேட்டை செய்றான். இவனுக்கு எல்லாம் உன் அம்மா தான் சரி. அவள் வளைச்சி பிடிச்சிடுவா. ஆனா இப்பதான் உடம்பு கொஞ்சம் அசந்திருச்சு. இவனை பிடிக்க ரெண்டு மூணு நாள் ஆக்கிடறா. தங்கச்சிக்கு போன் போட்டு அவளை அனுப்பி விட சொல்லு" என்றார் பெரியசாமி.


 எப்போது நினைக்கிறாரோ இல்லையோ இந்த நேரத்தில் தன் மனைவியை நினைத்தார் பெரியசாமி.  


அப்பா இப்படி சொல்லவும் தலையை சுற்றியது ரவிக்கு. 


இருந்தாலும் அம்மாவை அழைத்து வருவதில் பிடித்தம் இல்லாத ரவி அப்பாவிடம் சமாதானம் சொல்ல வர, 

" அதெல்லாம் எனக்கு தெரியாது. அவளை வரச்சொல்லு . அவ இருக்கும் போது சின்னதா இருந்தான் இவன். இப்ப பெரிசாயிட்டான். என்னால சமாளிக்க முடியல என்று மீண்டும் அப்பா சொன்னார்.    


 " இருந்தாலும் அப்பா ! ஒரு எலியை பிடிப்பதற்காக டெல்லியில் இருந்து அம்மா வரணுமா? அதுக்கு மருந்து வச்சா சாகப்போது" என்று சொன்னான் ரவி.  


தன் ஜோடி இல்லா தனிமைக்கு அப்பா புது விளக்கம் கொடுக்கிறார் என்பதையும் புரிந்து கொண்டான் ரவி.


ஆம். அப்பா சொல்வது உண்மை தான். எலிகளை பிடிக்க தனி திறமையும் வேண்டியிருக்கு. இருந்தாலும் எழியை பிடித்து அதை சாகடித்த பிறகு அம்மாவின் முகத்தில் தெரியும் வேதனை , அவளும் ஓர் தாய் என்பதால். செத்த பிறகு அதன் முழிகளின் அழகையும் ரசித்து, "பத்தோடு பதினொன்னாக பாவத்தை சேர்க்கிறேன்" என்று சொல்லிக்கொண்டே அதை வெளியில் இருக்கும் குப்பைத் தொட்டியில் போட்டு விடுவாள்.


 அதை பார்க்கும் அப்பாவும் இவளுக்கு என்ன ரசனையோ? என்ன கண்றாவியோ? என தலையில் அடித்துக் கொண்டு சென்று விடுவார் அதை பிடிக்க தெரியாவிட்டாலும்.


சாதனையிலும் வேதனை உண்டோ? தாய் என்பவளுக்கு

நித்தம் உதயம் மறைவு by Vidhya Nivash

 


ஓரே நாளில் மஞ்சள் வெயில் ,செவ்வானம் பார்க்க கிடைத்தால்..அதிர்ஷ்டம்.

உதயம் மறைவு இரண்டும் நித்தம் நடக்கிறது. அது எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் யாரும் அதை தடுக்க முடியாது என்று சொல்லும் இயற்கை.

எளிமையான ஒன்று முயன்றால் முடியும்.இதை வைத்தே இயங்கிய உலகம் இயற்கையோடு, அதுவே ஆரோக்கியத்தின் சான்று உடல்நலத்திற்கு மட்டும் அல்ல மனநலத்திற்கும் சேர்த்து.

பயணம் முடங்கி போனால் மனமும் முடங்கும்.சூரியனையும் நிலவையும் பார்ப்பதே அதிசயமாகி போன கட்டட நெரிசல்.எங்கோ இருந்து கசியும் வெளிச்சம் ஜன்னல் வழியே எட்டிப்பார்க்க.. அதுவும் இல்லாமல் ஆக்கிய திரைசீலைகள்.

மழை வேண்டும் வந்தால் வாழ இடம் இல்லாமல் போன அவலம்.இயற்கையின் சீற்றம் அல்ல செயற்கையின் ஆட்சி.

Friday, December 15, 2023

குடை by Veena Shankar

 


மழைக்கும் வெயிலுக்கும் கொண்டாலும் இட்ட வடகத்தை காக்கவும் செய்வான் காகத்திடமிருந்து


 சுடும் வெயிலுக்கு குளிர் கொடுக்க தாங்கினானோ?


மழையின் தாக்கத்தை கட்டுபடுத்த விரித்தானோ?


மற்றவரிடம் தப்பித்துக் கொள்ள உனை ஏந்தினானோ?


பெண் தர மறுத்த நேரத்தில் உனை கொண்டு யாத்திரைக்கு கிளம்பினானோ?


மிடுக்காய் வலம் வர பெண்களும் விரும்பினரோ?


உன் எழில் வண்ணத்தில் அனைவரும் அடி பணிந்தாரோ?


அவசரத்தில் சில நேரம் திறக்காமல் போக்கு காட்டினாலும் உன் தேவை வேண்டும் இங்கே

பால்வெளியில் வானவேடிக்கை by Vidhya Nivash



 பரபரப்பான உலகத்தை தாண்டி இயங்கி கொண்டிருக்கும் ஓர் அர்த்த ஜாம உலகம்.அதை காண பறக்கும் ஊர்திகள் மணல் பறக்க. வானின் குப்பைகள் எங்கும் கொட்டும் அழகு.எண்ணிடங்கா நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருக்க அதை கண்கொட்டாமல் பார்க்கும் பல கண்கள். எண்ணிலடங்காத மின்னல் வேகத்தில் எரிந்து கொட்டும் வால் நட்சத்திரம். இயற்கை நடத்தும் ஓர் அற்புத வான வேடிக்கை. இத்தனை நாட்கள் வீணாகி போனதே.

அதிஅற்புதமான இயற்கையின் விளையாட்டு நடக்கும் பால்வெளி கண் முன்னே விரிய. அதில் பெரிய டார்ச் லைட்டை யாரோ அடித்து விளையாடுவது போன்ற காட்சி.இரவின் மடியில் உறங்கா நட்சத்திர கூட்டத்தின் நடுவே நாமும் நிற்கும் நொடிகள் அழகு.வான்வெளியில் வால்நட்சத்திரத்தின் வானவேடிக்கை.

Wednesday, December 13, 2023

பார்வை வேறு by Veena Shankar



 பார்வை வேறு


கண்கள் கொள்ளையடிக்க


கைகள் பற்றிக் கொள்ள


மனங்கள் இணங்க


காதலும் மேலோங்க

  

காலமும் ஒத்துழைக்க


தனிமை இனிமையாக


உடலும் இறுக


புதிது பிறக்க


துணையின் பார்வை

 வரவில் சிறக்க


அதுவும் வளர


வாலிபம் கொள்ள


தனிமையானது மீண்டும்

பழஞ்சோடிகள் 


காலமும் துணையானது ஒருவரை ஒருவர் 

இறுக பற்றிக் கொள்ள


இப்போது நெருப்பு இல்லை அவர்களிடத்தில்


பார்வை ஒன்றே போதுமே

மலர்ச்சி by Vidhya Nivash

 


சின்னஞ்சிறிய மலரே காலையின்

 விடியலே. மெல்ல இதழ் விரிக்க உன்

 சிவந்த மேனியை கண்ட என்

 கண்ணங்கள் சிவக்குதே. சில நாளே

 நிலைக்கும் உன் மலர்ச்சி  நம்பிக்கை

 தருதே.பல நாள் காத்திருப்பின் பரிசு.

 இயற்கையின் படைப்பே மீண்டும்

 துளிர்க்கும் என்ற நம்பிக்கையே

 பார்ப்போரை மலர செய்யுது.



படமும் கருத்தும் by Veena Shankar

  


தொலைவிலிருந்து பார்த்தால் நாம்

 

காணும் இன்னல்கள் சிறுமையாகும்


 அண்மையில் கொண்டு பார்ப்பதை விட


மனதை இரும்பாக்கிக் கொண்டு


தொலைவிலிருந்து எதையும் காணப்

 பழகுங்கள்


உறவுகளும் இனிமையாகும்

காட்சிகளும் நினைவாகும்

ஒருங்கிணைந்த பாரதம்

மனதால் 

அடுத்தவரை

புறந்தள்ளியது 

மதத்தால் ஒற்றுமை கண்டது

Tuesday, December 12, 2023

பச்சை படலம் by Vidhya Nivash

 


அமைதியின் உருவே இங்கு

 உறங்குவது என்ன? பச்சை படலம்

 போர்த்த குளிருக்கு உறங்கமோ?

 நீங்கள் விட்டு சென்ற வார்த்தைகள்

 எங்கும் காற்றில் எதிரொலித்து

 மீண்டும் வந்து பாறையில் மோதி

 சிதறி போக நீங்கள் உறங்குவது

 என்ன? எவ்வுயிருக்கும் அடைக்கலம்

 என்றே பல்லுயிரும் பல்கி பெருக

 அடைக்கலமோ இந்த கற்சிலை.

உங்களோடே சேர்ந்து இந்த மலையும்

 உறங்குது இங்கே.

படமும் கருத்தும் by Veena Shankar

 


ஒளி கொடுத்தாலும் தவறு

ஒலி கொடுத்தாலும் தவறு

 வையகத்தில்


உடைந்த பாகம் குப்பைக்கு செல்வதும்

 உண்டு

அடுத்தவருக்கு குழி பறிக்க

 தூண்டுவதும் உண்டு


 உடைந்து போன பின் வருந்துவது

 கூடாது பொருளானாலும்

 உறவனாலும்

ஓட்டுவது கடினமே


ஒளி கொடுத்தது இங்கே

 அமைதியானது உடைந்து போன

 மனதாலும் உடலாலும்

தெரியாதவனின் அறியாமையால்

 உடைந்த கலன் பயனற்று போகும்

 அதன் வாழ்க்கையிலும்


தலைக்கு வந்தது தலைப்பாகையோடு

 போனது என்ற கூற்று பொய்யானது

 இங்கே

Monday, December 11, 2023

நுண்ணோக்கி பார்வை by Vidhya Nivash

 


நுண்ணோக்கியில் பாக்டீரியாவா ??

இல்லை வேறென்ன இது?

கண்ணுக்கு எட்டா தொலைவில்

 இவர்களின் கூட்டம்?

அப்ப கண்டிப்பாக புழுக்கள் இல்லை?

எவ்வளவு அழகான கூட்டம் .பிரமிப்பாக

 பார்த்தேன் ஏன் இந்த வட்ட மேஜை

 மாநாடு என்று.

ஒரே நேரத்தில் ஐம்பது பேர்

 இருப்பார்கள்.

இவர்கள் இது மாதிரி ஓர் இடத்தில்

 கூடினால் பலருக்கும் ஓர் எண்ணம்

 வரும்! இவர்கள் யார்?

நிழல் by Veena Shankar

  


இறந்த காலத்தை நினைக்கும் மனமும்

நிழலை மதிக்கும் மனிதனும் தோற்பதில்லை


புதையல் நிலத்தில் மட்டுமே எடுப்பதில்லை,

 நீரிலும் தேடலாம் 

நம் நிழல் என்னும் புதையலை 

 நம் மனதில் மாற்றம் கொள்ள


தொலைந்த இடத்தை அறிந்தால் மட்டுமே

 தேடியது கிடைக்கும்

 நான் தேடியது என் மனதை

அது காதலியிடம் சிக்கிக் கொண்டது

அதன் நிழல் மட்டுமே கிடைத்தது

காதலுக்கு சின்னமாய் உயிரை

 இங்கே 

தொலைத்த என் காதலியால்

எனக்கு கிடைத்த புதையலே

 தொலைந்தது

 இங்கே

புதை குழியில் நிழலாய்


கண்டதும் காண்பதும்

 வென்றதும் வெல்வதும்

கொண்டதும் கொள்வதும்

துவண்டதும் துவள்வதும்

தணிவதும் தவிப்பதும்ன

எதற்கு

புதையலாய் இருக்கும் பெண்ணின்

 மனதை

 அறிந்து கொள்ளவோ?

Saturday, December 9, 2023

பார்த்ததில் ரசித்தது by Vidhya Nivash

 


ஒருவரின் கற்பனை வானம் அளவு பெரியது. நொடி பொழுதில் தோன்றும் எண்ணம் அதை அடையும் போது உருவத்தில் சிறிதானாலும் அதன் மகிழ்ச்சி வானை எட்டும் அளவு பெரியது.கண்ணும், வாயும் போதும் ஓர் உயிரற்ற பொருள் இங்கே உயிருள்ள ஜீவனாக சிரிக்கிறது.

மகளின் கைவண்ணத்தில் முளைத்த அழகு.கீழே கண்ணாடி மேலே வானம் எங்கிருந்து? மடிக்கணினியின் திரையில் இருந்து .ஓன்றை உருவாக்கி அதை அழகாக படைக்கும் விதம் இன்றைய தலைமுறையினரிடம் நாம் கற்க வேண்டியது.பிடித்ததை செய்யும் போது பொறுமை தானாக வருகிறது. விரும்பியதை அடையும் வரை அது தொடர்கிறது.

படமும் கருத்தும் by Veena Shankar

 


எட்டி பார்த்து என்ன செய்ய போகிறாய்?

நான் கண்டதும் ஒளிந்து கொள்கிறாய்


உன் அழகால் நீ என்னை கவர நானும் சிறுமைபட்டேன் 

என் ஒளியும் உன் நிலையும் காதல் கொண்டாலும் ஒரு சேர வாழ முடியாமல் உலகம் நம்மை பிரிக்கிறதே?

அதனால் நீ செல்கையில் நானும் உன்னை பின் தொடர்வேன் எந்நாளும், ஒரு சில நாட்களை தவிர

 என்றது இரவுப் பொழுது நிலவு இருட்டைப் பார்த்து



இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...