Saturday, December 2, 2023

எங்ஙனம்! இங்ஙனம் by Vidhya Nivash

 


இதை பார்த்தால் போதும் மனம்

 சொல்லும் மீண்டும் உறங்க .

 நில்லாமல் ஓடும் இந்த உலகில் நிற்க

 தெரியாமல் உறங்கும் அழகு. பிஞ்சு

 தாயின் கருவறையில் உறங்கிய அதே

 நிலை மீண்டும் வேண்டும் என்று

 சொல்லுதே. எதையும் சிந்திக்கா

 அந்நிலை தேடுதே மனம் . ஓரு நொடி

 நில்லாமல் ஓடும் எண்ணமே

 கொஞ்சம் நில் . கொஞ்சம் கருவறை

 நித்திரை கொள்கிறேன். ஆனால்

 அந்த பிஞ்சோ சொல்லுதே இந்த

 இரைச்சலை உள்ளே இருந்தே கேட்க

 முடியவில்லையே வெளியே எங்ஙனம்

 கொள்ளும் மனமும் உடலும்...

 எதை கண்டாலும் அதை அடைய

 ஆசை. தீராத ஆசை சொல்லும் பாடம்

 எதுவும் நிரந்தரமில்லை. அதை

 உணரும் பக்குவத்தை தேடு .இந்த

 பிஞ்சு போல் உறக்கம் தேடு.ஆடி ,ஓடி,

 தேடிய உள்ளம் கடைசில் கொள்ளும்

 அமைதி.அதுவே ஆத்மார்த்தமான

 ஓய்வு.அது வரை ஆடு .ஆனால்

 உறக்கத்திலும் உன்னை

 ஆட்டுபவரையும்,

 ஓட்டுபவரையும், 

தேடுபவரையும்

 மறக்காமல் சிந்தனை கொள்...

 யாங்ஙனம் என்று வரும்! 

இங்ஙனம் ஆசை!


2 comments:

  1. அழகான கருத்து வித்யா. அருமை

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...