Friday, December 8, 2023

இந்த வார தலைப்பு "மூக்கு கண்ணாடி" by Veena Shankar

 


விழிகளின் ஏற்றத்தால் மாறுபடும் ஆடிகள்


என்றும் ஒன்றை ஒன்று விட்டுக் கொடுப்பதில்லை மூக்குக் கண்ணாடியின் வடிவமைப்பில்


காட்சிகளை சுகமாக்க வந்த செயற்கை விழிகள்


வயதின் மூப்பையும் கருவிழியின் இழப்பையும் பொறுத்தே மூக்குக் கண்ணாடியின் பயன்பாடு


தேவையறிந்து இதனை கொண்டாலும் சமயத்தில் தேடும் ஒரு பொருளும் இதுவே


என் மனம் ஆசை கொள்ள அணிந்தேனே

பிறர் ரசிக்கவும் அணிந்தேனே 

கண்கவர் வண்ணங்களில் முகம் சிறப்பாய் சிறந்ததே 


விழி மாறுபாட்டிற்காக போடும் மூக்கு கண்ணாடியில் தான் எத்தனை மாடல்கள் ஸ்டையில்கள்


தூரத்து பார்வையை அண்மையாக்குவதும்

 அண்மையை தொலைவாக்குவதும் 

மறைவாய் காண

 காட்சியை குளிர்விக்க 

 கறுப்பு நிற கண்ணாடியும் மனிதனுக்கு மனிதன் கொடுத்த கொடையே



சிலநேரம் சிரம் மேல் பள்ளி கொண்டு பரிதவிக்க வைப்பாயே


மேலும் சிலநேரம் சோகத்தில் வரும் கண்ணீரை மறைக்க உதவுகிறாயே

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...