Monday, December 4, 2023

ஆசிரியர் by Veena Shankar

 


ஓடும் போதும்

விளையாடும் போதும் 


ஆடும் போதும் பாடும் போதும்


கடும் சொற்களால் நான் கடிந்த

 போதும்


அதை


வடுவாய் நினைக்காமல்


நீங்கள் மகிழ

கூடும் போதும் 


நான் உங்களை தெரிந்தே 

சாடும் போதும்


இடையே


கேடு கொள்ளும் என்

உடலால்,


மனதால் நான்

வாடும் போதும்


தேடும் என் கண்கள்

விடுமுறையில் கூட


என் குழந்தைகளே!


நான் பெறாவிட்டாலும்


ஆசிரியையாய் நான்


 பெற்ற பேறு இதுவே.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...