Saturday, July 29, 2023

வாழ்க்கை by Veena Shankar

 


வாழ்க்கை


வாழ தெரிந்தோர்க்கு மட்டுமே இன்பம் தானோ?


வசதியுள்ளவர்களுக் கும் குணத்தில் வறுமை தானோ?


பரிகாசம் செய்வோருக்கு சொர்க்கம தானோ?


ஏற்றம் கொள்வோருக்கு போற்றதல் தானோ?


இறக்கம் அடைந்தோருக்கு கலக்கம் தானோ?


இரக்கம் கொண்டோருக்கு ஏமாற்றம் தானோ?


களம் தேடும் வித்தகருக்கும் விடியல் தானோ?


காட்சிகள் தவறுவதும் மறு ஆக்கத்திற்கு தானோ?


வழிந்தோடும் கண்ணீரும் வடிந்தோடும் வெள்ளம் தானோ?


சந்தர்ப்பத்தால் மாறுவதும் இயல்பு தானோ?


சாத்திரங்களுக்கு பாத்திரமாவதும் உண்மை தானோ?


வாழ்க்கையில் தேடுவதும் மனிதம் தானோ?


பல பரிணாமங்களை கொண்ட அற்புத வட்டமும் வாழ்க்கை தானோ?


இதை சொல்ல தூண்டுவதும் வாழ்க்கையின் விளையாட்டு தானோ?

Friday, July 28, 2023

அவளும் நிலவும் by Veena Shankar

 


நிலவிலும் மரம் வளர்த்தது யார்?


மங்கையின் உள்ளத்தைக் களவு

 கொண்டதும் யார்?


விடை தெரியாமல் விழிக்கும் இரவில்

 ஓர் கனவாய், கன்னியின் மனதில்


நிலவும் ஓர் கள்வனே!


வானத்தை விட்டு நிலவு வெளி வந்தது


பட்ட மரமும் பூ பூத்தது


அவள் கனவும் நிறைவேறியதா?


தனக்கு சுதந்திரம் கிடைத்ததா?

 இல்லையா ? என்று தெரியாமலே

 காத்திருக்கிறாள் இரவின் மடியில்

Wednesday, July 26, 2023

பறவையின் கருணை by Veena Shankar

 


 தன் இனத்தை அழிக்கும் மனிதனை மன்னித்து , அவன் சந்ததியாவது நிலைக்கட்டும் என்ற எண்ணத்தில் அவன் உயிரை காப்பாற்றும் பறவை.

 சிறகொடிந்த பறவைக்கு சிறகுள்ள பறவையின் பார்வையும் தேவையும்

போதைக்கு அடிமையாகி உயிருக்கு போராடுபவனை தூக்கி நிறுத்த முயலும் , எப்போதும் தண்ணீரிலேயே மிதக்கும் பறவை.

 இம்முறை பறவையின் வலையில் சிக்கியவன் மனிதனோ? அல்லது விலங்கோ?

 மனித வல்லூறுகளை பதம் பார்த்த பறவை

இரையினை கொத்தி தின்ன தயாராகும் பறவை, 


கூட்டத்தோடு பகிர்ந்து உண்ண எண்ணி தூக்கி செல்லும் பறவை, 


ஒரு மனிதனின் இழப்பால் அதன் முழு இனத்திற்கும் விருந்தானது இன்று

கொத்தி தின்னும் பறவையும் மனித உயிரை கொத்தி காப்பாற்றும் முயற்சியும்

Sunday, July 23, 2023

மைக்ரோ மினி உலகம் -1 by Vidhya Nivash

 


ஹலோ செல்லக்குட்டி ரொம்ப நேரமாக

 அதில் வாசம் செய்கிறாய்.தாத்தாவின்

 வெண் தாடி போல் யாருமில்லாத

 ஒற்றை உயிரிடம் என்ன பேச்சு

 வார்த்தை ஒப்பந்தம் போடுகிறாய்.

உலக அமைதியோ?

அதில் தேன் இருப்பது போல்

 தெரியவில்லை.சின்ன சின்ன

 மைக்ரோ மினி உலகில் எவ்வளவு

 அழகு.இந்த விஞ்ஞானத்தின்

 உதவினால் உன்னை உலகறிய

 முடிகிறது.வெள்ளை உடலில்

 கரும்புள்ளிகள் தாங்கி அசையாமல் நீ

 இருக்கும் அழகு உள்ளம் கொள்ளை

 போகுதே செல்லமே.

தொடரும்..

திருத்தேர் by Veena Shankar





 திருத்தேர் உற்சவம்


திருவாரூர் தேருக்கு அடுத்தபடியாக பெரிய தேர் என்று சொல்லப்படும் ஶ்ரீவில்லிபுத்தூர் தேர் திருவிழா நேற்று ஆடிப் பூர திருநாளில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இத்தனை வருடங்களாக பக்கத்து ஊரில் வசித்து வந்தாலும் ரசிக்க முடியாமல் போய்விட்ட தருணங்கள் வீணோ? என்று தோன்றியது. முதன் முறையாக இந்த உற்சவத்தை பார்த்த போது அருமையான நேரம் தான் எனக்கு.


திருவாரூர் ரதத்தின் தம்பியோ இவன்?


அரிதாரம் இல்லா அலங்காரம் கொண்டவனோ?


பூமாலை மட்டுமே தரித்தாலும் அசஞ்சாடிகளோடு வருவதும் கொள்ளை அழகே.


காண விழிகள் அகலமானதோ? இல்லை விழிகளை அடைத்து தேர் வீதியில் நின்றதோ?


 பிரம்மாண்டத்தின் பொருளை உணர்ந்த சமயம் மெய் சிலிர்த்ததோ?


வனப்பு யாரிடம் இல்லை? படைத்தவனிடம் இருக்கும் போது அவன் படைக்கும் ஒவ்வொரு பொருளிலும் உண்டு தானே?


தேர் அசைந்து வந்த அழகும் வீதியில் அதன் தடம் பதித்த அழகும் அற்புதமே!


மக்கள் கூட்டம் எறும்புகளை போல் சுற்றி நின்று காண, இனிப்பாகி போனது நடுவில் பவனி வந்த தேர்.


வடங்களை பிடித்து இழுப்பதற்கென்று ஒரு கூட்டம். தேர் வீதியின் கோடியில் திரும்பும் போது அதன் வடம் 250 முதல் 300 மீட்டர் வரை முன் நின்றது . மக்கள் கூட்டம் ஆர்ப்பரிக்க, தேர் வீட்டு வாசலில் வந்ததோ என்று நான் பார்க்க, அது திரும்பாமல் கண்ணாமூச்சி காட்டியது.


பஜனை கூட்டங்களும், திருமண் இட்ட முகங்களும் , நான்கு வீதிகளிலும் களை கட்டியது.


தூரத்தில் பார்க்கும் போது சாதரணமாக பட்ட தேர், பக்கம் நெருங்க நெருங்க அந்த காட்சி கண் முன்னே என்றும் மறவாது என்னுள்ளே!


ரதம் நெருங்கி வந்த வேளையில் என் சிரம் என்னை அறியாமல் என் பின்னோக்கி போனது அதிசயமே!


அன்னதான கூடங்களும் பல, அடுத்தவரை கவரும் பொருள்

விற்பனையாளர்களும் பலர், சிறுவர் சிறுமியரை கவர.


தெரிந்த பெண் பிள்ளைகளுக்கு வளையல் வாங்கி கொடுப்பதும் ஊர் வழக்கம் என்று நினைக்கிறேன்.


 பெண்ணை சம்மந்தம் செய்த வீட்டிற்கு அதாவது தங்கள் வீட்டு பெண்ணின் கணவருக்கு "தேர் தேங்காய் " என்று பூ, பழம், தேங்காய் மற்றும் தட்சணையோடு ஓதி இடுவது என்பதுபெண் வீட்டார் வழக்கம். இதற்கு வருடங்கள் கணக்கில்லை. வருடா வருடம் அவர்கள் கடைபிடிப்பதும் சிறப்பே!


என் மன வேட்கையை பூர்த்தியாக்கி விட்டேன் நேற்று, மீளா அந்த நினைவுகளோடு இன்னமும், அடுத்த வருட தேர் திருவிழாவை இப்போதே எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

Saturday, July 22, 2023

இந்த வாரத்தலைப்பு "கால்கள்" by Vidhya Nivash



 கால்கள்

 அனைவரும் போற்றி காக்க

 வேண்டிய உன்னை தினமும் ஒரு

 நொடி கூட நினைக்க நேரமில்லை .பூ

 போன்று மென்மையாக படைக்கப்பட்ட

 காலை பாரங்கற்கள் போல்

 பாறையாக பாறையாக வெடித்து அது

 வலிக்கும் போது தான் தெரியும்

 தினமும் நம் சுமை தாங்கும் காலை

 கையால் கூட தொட்டு

 பார்க்கவில்லை என்று .கால்களே நம்

 ஆரோக்கியத்தை குறிக்கும்

 ஆணிவேர்.அது ஆடினால் சகலமும்

 ஆடும்.


இளமையில் அழகுக்காக பலவற்றை

 போட்டு நடந்து அது பழுதடையும்

 போதே உரைக்கும்.நம் பாதங்கள்

 நோகாமல் இருக்க ஓடிய பாதங்களை

 ஒருமுறை பாருங்களே மனம்

 வலிக்கும்.


அகத்தின் அழகை காட்டும் கண்ணாடி

 கால்கள். உன் துணையில்லாமல் ஒரு

 அடிக்கூட நகர முடியாது.அப்படிப்பட்ட

 உன் துணையில்லா போதே

 உணர்ந்தேன் உன் அருமை.


இந்த வாரத்தலைப்பு "கால்கள்" by Veena Shankar

 


கால் தடம் சொல்லும் நம்

 முன்னேற்றத்தை


கால் விரல்கள் சொல்லும் நம்

 அழுத்தத்தை


கால்கள்


மருதாணி இட்டு அழகு பார்த்த

 கால்களில்

 கல்லும் மண்ணும் அடைத்து நிற்க


தங்க தாம்பாளத்தில் தாங்கப்படுவேன்

 என்று வெறுங்காலுடன் நிற்க


புரியாத புதிராய் பல ஓட்டங்கள்

 கொண்டு சோர்ந்து ஓரிடத்தில் நிற்க


ஓட்டத்தின் ஊடே கேட்கும் கேள்விக்கு

 பதில் சொல்வதற்கு கால்கள் நிற்க


ரோஜா இதழில் நினைத்த கால்கள்

 நடந்த வலியில் உப்பு நீரில் நிற்க


வாழ்வின் நீண்ட பயணத்திற்கு

 இடைவெளி கொடுத்து இளைப்பாற

 கால்கள் நிற்க


சாதித்ததால் இனி ஓய்வு என்று

 எண்ணி கால்கள் நிற்க


அந்த ஓய்வும் நீடிக்காமல் சுருங்கிய

 கால்கள் மீண்டு நிற்க


முதுமை துரத்த மீண்டு எழ முடியாமல்

 கால்கள் நிற்க


வறுமை பின் தொடர, எழுச்சி கொள்ள

 கால்கள் நிற்க 


முடமான கால்கள் பயிற்சியால் எழுந்து

 நிற்க


பிறரின் சுடும் வார்த்தைகள் கேட்டு ஓட

 தயாராக கால்கள் நிற்க 


உடல் உபாதையால் அடியெடுத்து

 வைக்க முடியாமல் அதே இடத்தில்

 கால்கள் நிற்க


குதூகலத்தில் நம்மையறியாமல்

 கால்கள் நிற்க


பாத அபிஷேகம் செய்ய வேண்டி

 அமர்ந்த நிலையில் கால்கள் நிற்க


மரியாதை நிமித்தமாக பெரியோரின்

 கால்கள் நிற்க


பிஞ்சுக் கரங்கள் பற்றி கால்கள்

 நடப்பது அழகு


தந்தையின் காலில் ஏறி அவரோடு

 இசைந்து கால்கள் நடப்பது அழகு


ஒருமித்த காதலோடு சேர்ந்து கால்கள்

 நடப்பது அழகு


மணமக்கள் தங்கள் கரங்களை பிடித்து

 கால்கள் நடப்பது அழகு


வாழ்க்கையில் பயணிக்க ஓர் நடையும்

 அவசியம் அதோடு பின்னி,

 மின்னியிருக்க.


கால்களே!

உன் அழகுக்கு எத்தனை

 ஆபரணங்கள்?


பூட்டி வைக்கவும் தெரியாமல் காட்டி

 மகிழவும் முடியாமல்.


விரலுக்கு தகுந்தாற் போல் மெட்டியும்

 அழகே!


மணவாளன் உள்ளான் என்பதை

 அறிய.


காலை சுற்றி பூட்டப்படும் கொலுசும்

 அழகே!


அவரவர் நிலைக்கு தகுந்தாற் போல்.


விரல்களில் சிவப்பு மேலோங்க இடும்

 மருதாணியும் அழகே!


நோய் எதிர்ப்பு சக்திக்காக.


விரல் நகங்களுக்கு வண்ண பூச்சும்

 அழகே!


பிறரை கவர்வதற்காக.


அங்கே அணியப்படும் காலணியும்

 அழகே!


இனிதாய் நடை பயில.


வெயில் தாக்காமல் இருக்க

 காலுறையும் அழகே!


சருமத்தை பாதுகாக்க.


சுப தினங்களில் மெருகேற்றும்

 நலங்கு குங்குமமும் அழகே!


பெண்களுக்கு , சம்பிரதாயத்தை

 விடாமல் காக்க.


 பரியின் கால்கள் ஓட்டத்திற்கும் 


மாட்டின் கால்கள் ஏற்றத்திற்கும்


கழுதையின் கால்கள் சுமப்பதிற்கும்


பூனையின் கால்கள் நளினத்திற்கும்


பெண்ணின் கால்கள் அழகிற்கும்


ஆணின் கால்கள் உழைப்பிற்கும்


உண்டென்றாலும் இவை யாவும்

 மனிதனின் வாழ்வில் இருக்கும்

 நடக்கும், ஓடும் கால்கள்

 எதிர்காலத்தின் தேவைக்காகவும்

 அமைதிக்காகவும்


 வாழ்க்கையின் நடையே!


ஓய்வில்லா நடையும்

நிறைவில்லா மனதும்


உடனில்லா நட்பும்

உறவில்லா தருணமும்


உரிமையில்லா நாளும்

மாசில்லா செயலும்


மறக்க இயலா நினைவும்

குன்றிவிடும் அறிவும்


குறிப்பிடா வருத்தமும்

வகைப்படுத்தா நோயும்


உறங்கா விழிகளும்

தெரியா அழுகையும்


காக்கும் கரங்களும்

கைவிடும் செல்வமும்


கழிக்கும் நிமிடங்களும்

கடக்கும் நிகழ்வுகளும்


வாழ்க்கையின் நடையே!

தென்னையில் ஓர் கானம் by Vidhya Nivash

 


அழகே அழகு உன் குரல் என்னை தட்டி

 எழுப்பியது. எட்டி பார்க்கும் தூரத்தில் நீ

 உன்னை முதன்முறையாக

 பார்க்கிறேன்.உன் பெயர் கொஞ்சம்

 சொல்லி செல்.மீண்டும் வந்தால்

 சொல்  காத்திருக்கிறேன்.. உன்

 வருகைக்காக சோலை எங்கும் காவல்

 போட்டு காத்திருக்கிறேன்.அதெப்படி

 உங்களுக்கு மட்டும் தெரியும் கனிந்த

 பழம். பாதி தின்று மீதி விட்டு

 செல்கிறாய் யாருக்காக காவலுக்கு

 இருப்பவருக்காகவா?

Friday, July 21, 2023

படமும் கருத்தும் by Veena Shankar



 படிக்கும் இடத்தில் மட்டும் எப்போதும் நீ கலைந்து போவதேனோ?

 தேடுதல் கொண்ட வாழ்க்கைக்கு, பாரில் நிலைத்து பேசும் பொக்கிஷமே!

சிறிய அளவிலான புத்தகம் கூட அறிவை விதைக்கும் பெட்டகமாகும்

பல வடிவங்கள் கொண்டாலும் (வாழ) கற்று கொடுப்பது ஒரே பாடம், அதுவே ஒழுக்கம்

 வரன்முறையற்ற வடிவத்தின் வரையறுக்கப்பட்ட உருவாக்கம்.

மலையின் மறைவில் by Vidhya Nivash

 


மாலை பொழுதில் மலையின் நடுவே

 மெல்ல மெல்ல மறையும் கதிரவன்.

 மேகங்கள் விலக, துயில் கொள்ள

 காத்திருக்கும் பறவைகள் ,கண்ணை

 உருட்டிக் கொண்டு ஆந்தைகள்.

 அங்கொன்று இங்கொன்றாக ஆடும்

 மரங்கள். இதழ் திறக்க காத்திருக்கும்

 மொட்டுகள். மெல்ல உதிரும் பூக்கள்

 அனைவருக்கும் விடைச்சொல்லி

 மறையும் கதிரவன்.

தனிமையின் பலம் by Veena Shankar

 


இருக்கும் இடம் தனிமை என்றாலும் பின்னால் இருக்கிறது ஓர் காக்கும் படை

மரமே சூரிய ஒளிக்கு ஏற்றவாறு வளைந்து கொடுத்து இயற்கைக்கு அதன் வழி வாழ இருக்கும் போது செயற்கையான சிலவற்றிற்கு மனிதன் மனம் மாறுவதும் கொடுமையே


திரும்பிப் பார் ஓர் உலகம் தெரிகிறது என்று இளைஞர்கள் பட்டாளத்தை காட்டுகிறது நமக்கு

வாழ்க்கையை ஓட்ட பாதை தேடி வந்தவனுக்கு பாதை தடைப்பட , அடுத்தது என்ன என்ற சிந்தனை மேலிட, அங்கேயே அமர்ந்து கீழே பார்க்க அங்கே சிறகொடிந்த பறவை, பறக்க எத்தனிக்க, தன்னுடைய தவறை களைந்து புது மனிதனாய் கிளம்பினான் அங்கிருந்து


புத்தருக்கு போதி மரம். இவனுக்கோ ஓர் தடைப்பட்ட பாதை, சிந்தனை ஊற்றோ பாறையில்

 ஏர் முனையானாலும் கூர் முனையானாலும் குத்து பட்டவருக்கு மட்டுமே வலிக்கும்

Thursday, July 20, 2023

வேட்டையின் நடுவே by Vidhya Nivash

 


டேய் தம்பி உன்னை தான் நீ

 பதுங்கியிருந்த அழகை பார்க்க

 வந்தேன்.நீ வேட்டையாட காத்திருக்க

 நான் உன் அழகை வேட்டையாட

 இடையில் சரசரவென காலில் ஏறிய

 பொடியனை பார்க்கவில்லை.அவன்

 வீட்டில் ஏறி விட்டேன்.நல்ல

 வேளையாக அவன் ஒன்னும் செய்ய

 வில்லை.நீ போய் செடிகளின் நடுவே

 மறைந்தும் என்னையே முறைக்க

 வந்த வழி திரும்பினேன்.ஆனால்

 நான் தேடி வந்தது உன்னை

 அல்ல.அவன் உன்னைவிட வேகமாக 

 சென்று விட்டான்.வழியில் உன்

 சேட்டையை கண்டு நின்றேன்...

வருகிறேன்.

Wednesday, July 19, 2023

பாரமா!பாசமா! by Veena Shankar

 


முடிந்த வாழ்வின் தொடர்ச்சி தேடுதல்

ஆணின் பாரம் என்றும் முடிவதில்லை,

 எப்பயணத்திலும் தொடரும்

விரட்டும் பசியால் முதுமையிலும்

 மிரட்டும் நடைபயணம்

 தான் அமர்ந்தால் இல்லாள் சுமப்பாள்

இல்லாள் சுமந்தால் தான் வருந்துவார்


இளவயதில் சுமந்து கெட்டதால்

 தளர்ந்து போனது நடை முதிர்வயதில்


பாசம் என்ற காரணத்தை சொல்லி

 வேசம் வென்றது கையில் காசு இருந்த

 வரை

காசும் போனது வேசமும் கலைந்தது

புத்தியும் வந்தது மீண்டும் சம்பாதிக்க

 தன்னை போல் தெருவில்

 விடப்பட்டோருக்காக

வழி தெரியாமல் விழி பிதுங்கி

 நின்றாலும்

உறவுகளையும் சினேகங்களையும்

 துறந்து தனிமை பயணம் எங்கோ? 


குடும்ப பாரம் இறக்கி தன் பாரத்தை

 சுமந்து பயணம் தன் ஆயுளை கடக்க

 எண்ணி


எதிர்பார்ப்பும் இல்லை அதனால்

 ஏமாற்றமும் இல்லை

பயணத்தின் நோக்கம் தெரியவில்லை 

பரந்த வானம் புலப்படவில்லை

பக்கத்தில் இருக்கும் பொருளும்

 தேவையில்லை

தூரத்தில் உள்ள பரம்பொருளை

 எண்ணுவதால்

பரிமாறுதல் by Vidhya Nivash

 


இந்த செல்லக்குட்டிகளின்

 விளையாட்டை என்னவென்று

 சொல்வது. பசியில் வாடி இருக்கும்

 போது தன் தட்டின் பக்கம் அண்ட

 விடமாட்டேன்.பக்கம் வந்தளே

 துரத்துவான்.இன்று வயிறு முட்ட

 சாப்பிட்ட பிறகு பிறர் உண்ண கண்டு

 மகிழ்கிறான்.அழகான காட்சி

 அவனுக்கு இரையாகும் உயிருடன்

 தன் உணவை பரிமாறுவது என்ன..

கைகோர்ப்பு by Veena Shankar

 


கைகள் பரிமாற உள்ளம் பரிமாறுமா?  


உள்ளம் பரிமாறியதால் கைகளின்

 பரிமாற்றமா?


 உடன்படிக்கைக்கானதா? அல்லது

 உத்தரவாதத்திற்கானதா? இந்த

 கைகோர்ப்பு.


விரல்களின் பிணைப்பு ஒற்றுமைக்கு

 பிறப்பு

Tuesday, July 18, 2023

இந்த வாரத்தலைப்பு "கிணறு " by Kiruthika

 


கிணறு கிணறு..

தோண்ட தோண்ட..

பூதம் இல்லை ..!!..

தித்திக்கும் நினைவு அலைகள் தான் கிளம்புகிறது !!!

நான் சிறுமியாக இருந்த போது ..

சித்தி வீட்டு கிணறு ..

சுற்றி - சித்தி ..அம்மா .. பெரியம்மா..அத்தை .. அண்ணி என ஒரு கூட்டமே ..கதையடிக்கும்!!!

நாலு குடம் தண்ணீர் எடுக்க வந்த சாக்கில் ...

என்ன தான் பேசுகிறார்கள் ..என குட்டீஸ் நாங்கள் எத்தனை முறை ..

கிணற்றை சுத்தி வந்தாலும் ..

ஒன்னும் விளங்காது!!!..

கடைசியில் அடுப்பங்கரையில் இருந்து ஒரு சத்தம் ..

அம்மாச்சியிடம் இருந்து ..

இன்னுமா தண்ணீர் எடுக்கலன்னு ...

அவ்வளவு தான் ..

சத்தம் இன்றி கலைவார்கள் அனைவரும் !!!!..

இன்று தொலைப்பேசியில் பதிவு செய்ய ..வாசல் வந்து நிற்கும் தண்ணீர் குவளைக்கு என்ன தெரியும் ..இங்கு தொலைந்து போன அரட்டை கதைகள் பற்றி யும்..சின்ன சின்ன சந்தோஷங்கள் பற்றியும் !!!

இந்த வாரத்தலைப்பு "கிணறு" by Vidhya Nivash

 


பல தலைமுறைகள் கண்டாய் நீ

 கேட்காத கதைகளும் இல்லை, கனவும்

 இல்லை. அள்ள அள்ள வளர்வாய்,

 மழை பெய்தால் குளிர்வாய்.

 கோடையில் பலருக்கு இருக்கும் ஓரே

 குற்றாலம் நீ .உன்னில் எட்டி

 கத்தாதவரில்லை. உன்னை

வெறுக்காதவரும் இல்லை.சரசரவெ

இறங்கும் கயிற்றில் வாளி வந்து

 தொப்பென்று விழும் சத்தம் இனிமை.

 அதுவே கைநழுவி விழ அந்த பாதள

 சங்கிலி வைத்து வாளியை

 எடுப்பதற்காக ஒரு போராட்டமே

 அரங்கேறும்.பல தலைமுறை கண்ட

 உன்னை இன்று யாரும் பார்க்காத

 மாதிரி மூடிவிட்டோம்.உடலை இழந்தும்

 இன்றும் ஊறிக்கொண்டு தான்

 இருக்கிறாய் மறைவில், நினைவில்

 என் இளமைக்கால தோழனே.

இந்த வாரத்தலைப்பு கிணறு by Veena Shankar

 



கிணறு


தோண்ட தோண்ட செழுமை


அங்கே கிடைக்கும் தண்ணீரோ

 இனிமை 


தாகத்தோடு குடித்தால் அருமை


கிடைத்த சுவையில் நான் அடிமை


கோடை காலத்திலும் இல்லை வறுமை


அயல்நாட்டில் காண முடியாத பெருமை


எடுக்க எடுக்க குறையாத வளமை 


நெடுநாளைக்கு பிறகு தீண்டினாலும்

 உணர்ந்த இளமை


உன்னை கையாள்வதுமே ஓர் திறமை


தீண்டியவர் மட்டுமே உணரும்

 பெருமை


ஆட்கள் இல்லாமல் பார்த்ததில்லை

 உன் தனிமை


ராட்டினமும் வாளியுமே உன் ஆளுமை


இறைப்போருக்கு தருவது வலிமை


நான் தீண்டாமல் போனாலும் நீ என்

 உடைமை

Monday, July 17, 2023

சவாலே சமாளி by Vidhya Nivash


ஒவ்வொரு பருவகாலத்தையும்

 வரவேற்க அந்த அந்த ஊர்களில்

 கிடைக்கும் பொருட்களை வைத்து

 பலவிதமான கொண்டாட்டங்கள்

 அனுசரிக்கப்படுகிறது.அதில் ஒன்றே

 இந்த தேங்காய் சுடுவது.தேங்காயில்

 இருக்கும் தண்ணீரே அற்புதம்.அதன்

 கண்ணில் ஓட்டை போட்டு

 அரிசி,பருப்பு,வெல்லம் சேர்த்து

 நெருப்பில் சுட்டு சாப்பிடுவது ஒரு

 சாவல்.ஆடிக்காத்தில் வரும் பல

 சாவலை சமாளிக்க ஒரு முன்மாதிரி

 இந்த கொண்டாட்டம். கடுமையான

 ஓடும் போட்டால் உடையும் அதுவும்

 நெருப்பில் சுட்டால் ..சரியான

 விதத்தில் கையாளப்பட கைப்பிடி

 தண்ணீரில் நிகழும் அற்புதம்.

Sunday, July 16, 2023

பற்றுதல் by Veena Shankar

 


படர இடம் கிடைத்தால் கல் என்ன ?

 கடவுள் என்ன? வாழ்க்கை தொடர

 பற்றுதல் வேண்டும் மண்ணும் வேரும்

 போலே


வழியும் உண்டோ உயரத்தை தொட,

அரணும் உண்டோ உயிர் காக்க,

ஈரமும் உண்டோ பசுமை வளர்க்க,

உச்சியும் உண்டோ வானத்தை அளக்க

இரட்டை ரோஜா by Vidhya Nivash

 


ஒற்றை செடியில் மலர்ந்த இரட்டை

 மலர்கள் நாங்கள் .உடலெல்லாம்

 முட்கள் பூக்க யாரும் அதை

 பார்ப்பதில்லை .எங்களின் அழகில்

 மயங்கி கையை பதம் பார்த்துக்

 கொள்கின்றனர்.கிள்ளினால் இரத்தம்

 வரும் சிவப்பு .முள்ளில்லா மீன்

 ருசிக்காது முள்ளோடு ரோஜா

 அழகு.இருவரும் மலர்ந்தோம் ஒன்றாக

 உதிரும் போது எப்படியோ .வாழும்

 வரை கொண்டாட்டம் நாளைப் பற்றிய

 கவலையில்லை.இரட்டை ரோஜா யார்

 வீட்டு ராஜா பறிக்க

 காத்திருக்கின்றன .

படமும் கருத்தும் by Veena Shankar

 


ஒரு விழி மறைந்திருந்தாலும் காணும்

 காட்சியும் ஒன்றென 


பூவின் இதழ்கள் விரிந்து உதடாயின


வழிந்தோடிய கண்ணீரில் புற்கள்

 உதயமாயின


கன்னத்தை வருட மொட்டுக்கள்

 பிறந்தன


உதிர்த்த சிரிப்பில் பூக்கள் விரிந்தன


மொத்தத்தில் அவளால் தோட்டம்

 அழகாயின

Saturday, July 15, 2023

ஒற்றை மலர்கள் by Vidhya Nivash

 

  

எத்தனை அழகான இயற்கையின்

 படைப்பு ஓர் உயிர் இர் உடல்

 என்பார்கள். இங்கே ஒட்டி பிறந்த

 இரட்டை குழந்தை போல் நரம்புகள்

 பிரிக்க ஒட்டிய ஓர் இலை.இருவரும்

 சரி பாதி யாரும் வந்து பிரிக்க முடியாத

 படைப்பு.அந்த இன்பத்தின்

 வெளிப்பாடாக மலர்ந்த

 மலர்கள்.பச்சை வண்ணத்தில் வைத்த

 திருஷ்டி பொட்டு போல் வெள்ளை

 மலர்கள் பூத்துக்குலுங்குது.யார்

 கையிலும் அகப்படாமல்

 படைத்தவனுக்காக

 காத்திருக்கின்றன ஒற்றை மலர்கள். 


சவாலாய் by Veena Shankar

 


தலைமுறை விடாது இந்த மரம் செய்யும் ஓர் தொழில் பற்றுவதில் ஊன்றுதல்

எனக்கான இருப்பிடம் இங்கே இருக்கிறது, சுற்றி சுவர் மட்டும் எடுத்தால்

தனித்து வளர தெரியாமல் தவிக்கும் மரம், வாழ்கிறது கூட்டு குடும்பமாய் மனிதனுக்கு சவாலாய்

Friday, July 14, 2023

பக்குவத்தின் களிப்பு by Vidhya Nivash


 என்னவென்று சொல்லுவது  இரு

 பருவ குழந்தைகளின் விளையாட்டு..

 என்பதைவிட ஆசை.எல்லோரும்

 இதை கடந்து தான் வந்திருப்போம். 


காலையில் எழுந்து அவரின்

 நம்பிக்கையின் வடிவை குளிக்க

 வைத்து அன்று மலர்ந்த மலரை

 வைத்து அலங்கரித்து அழகு பார்க்க

 ஒரு குழந்தை.பருவத்தால் முதிர்ந்து

 அனைத்துலக இன்ப துன்பத்தை

 கடந்து இன்று குழந்தை மனம்

 கொண்டு முதிர்ந்த பக்குவத்தின்

 வடிவம்.


மறுபுறம் இன்னும் காலம் இருக்க

 வயதால் பக்குவமடையாத செயலில்

 முதிர்ந்து சமைத்து உண்ண ஆசை

 கொண்டு அதை அடைந்த ஆசையில்

 ஒரு களிப்பு .


இந்த எண்பது மற்றும் பதினொன்றின்

  விளையாட்டில் கண்டது இடையில்

 இருக்கும் பருவத்தில் கடந்து

 வந்ததையும், கடக்க போவதையும்

 கண்ட மகிழ்ச்சி.உணர்ந்த பாடம்

 எதையும் மனம் விரும்பியது போல்

 பிறர் மனம் நோகாமல் வாழ்ந்தால்

 போதும் என்றே.



Thursday, July 13, 2023

பதில் எதுவோ? by Veena Shankar



மரம் பெரியதா? இல்லை என் இறக்கை பெரியதா? பதில் எதுவோ?


 மனிதரிடம் இருந்து என்னை காப்பாற்றிக் கொள்ள மரத்தில் தஞ்சம் கொண்டேன். ஆனால் நினைக்கவில்லை அவன் மரத்தையும் வெட்டி சாய்ப்பான் என்று

வெற்றி கனியை தொட்டுவிட்ட மகிழ்ச்சியோ இந்த மயிலுக்கு, மேகங்களை கண்டு சிறகு விரிக்க காத்திருக்கிறதோ?

சிறகை விரித்து காட்டாவிட்டாலும் உன் அழகில் மயங்கும் பெண் மயிலான நான்

மரத்தில் வீற்றிருக்கும் நீயான ஆண்மயிலே! என்னை உனதாக்கி கொண்டு ஆள் மயிலே! என்ற பேச்சை கேட்டு சுற்றும் முற்றும் பார்க்கும் ஆண் மயில் மையலோடு

அடங்கிய ஊர் by Vidhya Nivash


 கடைசியாக கொட்டி தீர்த்த மழை

 துளித்துளியாய் அணிவகுத்து நிற்கும்

 மழைத்துளியை தாங்கி நிற்கும் கொடி

 கம்பிகள் சுமையை சுமந்த உடல் 

இன்று நீர் சுமக்க குளிருதே  அதற்கு 

மேலே மின்சாரத்தை கடத்திச் 

செல்லும் மின்கம்பிகள் யாரும் 

அருகில் வரவேண்டாம் என்று ஆந்தை 

போல் முழிக்க மழையில் கூட்டில் 

அடங்கி இருக்கும் குருவிகளின் காதல் 

கீதம் கண்டு காற்றில் உரசி 

கொள்ளும் தென்னை மரங்கள் 

மழையோடு வீசும் காதல் கீதம் 

ஊரெங்கும் வீச அடங்கிய ஊர்

 அடங்காதா தலைவியின் உள்ளம்

 தன்னை கடத்த ஆளில்லாமல் மணித்

 துளியை கடத்திக் கொண்டிருக்கே..


தனிமை by Veena Shankar

 


தனிமையால் விளை (வீழ்) ந்த வாழ்வு


தனிமையானதால் பைத்தியமா?


பைத்தியமானதால் புலம்பலா?


புலம்புவதால் ஆதங்கமா?


ஆதங்கத்தால் 

வெறுப்பா?


வெறுப்பினால் மிருகமா?


மிருகமானதால் ஆக்ரோஷமா?


ஆக்ரோஷத்தினால் தண்டனையா?


தண்டனையால் குரோதமா?


குரோதத்தால் தனிமையா?

Tuesday, July 11, 2023

சிந்திக்க தெரியவில்லை by Vidhya Nivash

 கண்கள் குளமாவது ஏன்? 

வலியா? இயலாமையா?

தன்னை யாரும் சுட்டிக்காட்ட

 வலிக்கிறதா?

தனிமையா? பயமா?

சுகமான வாழ்க்கை போராட்டமாக

 மாறினால் பயமா?

நினைத்தது கிடைக்காத போது வரும்

 கோபத்தின் எல்லை என்ன? அதை

 கையாளுவது எப்படி? 

தன்மையாக பேசு என்கிறோம்

 நடப்பது எப்படி?

 சிறு குழந்தை சொல்ல கேட்க புத்தி

 உரைக்கிறதே !





இந்த கார் மேகம் கூடி அழுது கொட்ட

 காத்திருக்க யாரோ வந்து

 குடைப்பிடிக்க வந்த திசை போய் ஓரே

 புழுக்கமாக புழுங்குதே அதற்கு

 அழுகையே மேல்

அடக்கத்தின் சின்னம் பொறுமையே by Veena Shankar

 


கணவரின் தலைப்பிற்காக பொறுமையோடு

 எழுதியது - "பொறுமை"


அடக்கத்தின் சின்னமும் பொறுமையே!


ஆக்கத்தின் முயற்சியும்

பொறுமையே!


இரக்கத்திற்கு சொந்தமாவதும் பொறுமையே!


ஈர்க்கும் குணமும் வேண்டுவதே பொறுமையே!


உதிரம் சிந்தினாலும் முடியுமோ?


ஊக்கம் கொள்ள செய்தாலும் கடைபிடிக்க இயலுமோ? பொறுமையை 


எதிர்வாதம் செய்யாமல் நம் நாளும் முடியுமோ? அதுவும் அரிதே!


ஏனோ மனமே! பொறுமையை இழக்கிறாய் உன்னுள்ளே ?


ஐம்புலன்களை அடக்கி காப்பது தானே பொறுமை?


ஒன்றல்ல இரண்டல்ல தருணங்கள் பொறுமை வெளிப்பட


ஓங்குதல் இருந்தால் மறையுமே இந்த பொறுமையுமே!


பொறாமையோடு சொல்ல விழைகிறேன் நானும் பின்னாளில் பொறுமையின் சிகரம் நானும் என்று


கடைபிடிக்க முயல்கிறேன் முடியுமா அது?

Monday, July 10, 2023

மழைக்கு பின் by Vidhya Nivash

 


மழைக்கு முன் அமைதி என்றால்

 மழைக்கு பின்னும் மாயான அமைதி.

 எதுவுமே நகராமல் நிற்பது போல்

 சோம்பல். புது தடத்தில் நடக்கும்

 எறும்பு நகர்கிறது போகலாமா

 வேண்டாமா என்பது போல் ,தொட்டில்

 இருக்கு ஆடவில்லை. சலவைக்கல்

 இருக்கு துவைக்க ஆளில்லை .

 கொடியிலிருந்து சொட்டும் தண்ணீர்

 துணிக்கு பதிலாக தொங்கும்

 கவ்விகள். அதில் பயணம் செய்யும்

 வண்டுகள். எந்த தொல்லையும்

 இல்லாமல் ஊறும் மரவட்டைகள்

 பறிக்க ஆளில்லாமல்

 பூத்துக்கூழுங்கும் பூக்கள் .ஜன்னல்

 ஓரத்தில் நின்று ஏங்கும் மங்கை

 போல் சூரியன். எங்கும் மணக்கும்

 மண்வாசனை மனிதனை தவிர

 அனைத்தும் மெதுவாக நேரத்தை

 நகர்த்த வெட்டவெளியில் ஊருகிறது.

 ஊரணியில் நீர் ஏறுகிறது. மண்

 விதைக்கு பாய்விரித்து

 காத்திருக்கிறது.


சிந்தனை செய் by Veena Shankar



 சிந்தனை செய்


மகளிர் தினத்திற்கான போட்டி ஒன்று அந்த காலனியில் முதல் நாள் அறிவிக்கப்பட்டு மறுநாள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. காலனியில் உள்ள பல பெண்கள் அதில் பங்கேற்றனர். போட்டிகள் பல நடத்தப்பட்டு அவ்வப்போதே வெற்றியாளர்கள் அறிவிக்கபட்டனர். விழாவின் இறுதியில் போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசு கொடுக்க போவதாக அறிவித்தார் விழா தொகுப்பாளர்.


 நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கு பெற்றிருந்ததால் அவர்களுக்குள்ளே போட்டி அதிகம் நிலவியது. ஒரே போட்டியில் அதிக பெண்கள் பங்கு பெற்றதால் பலகட்ட போட்டிகள் அவர்களுக்கு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறும் பெண்கள் மட்டுமே அடுத்த நிலைக்கு செல்வதாக அறிவிக்கப்பட்டது. இவ்வாறாக பல போட்டிகள் நடத்தப்பட, இறுதியில் பத்து பெண்கள் மதிப்பெண் அடிப்படையில் ஒரே இடத்தை பெற்றிருந்தனர் .அந்த தேர்வான பட்டியலில் நீலாவும் அடக்கம்.


அடுத்த சுற்றில் போட்டியாளர்கள் முன் மேஜை வைத்து அங்கே பத்து விளக்குகள் அடுக்கி, எண்ணெயும் திரியும் வைக்கப்பட்டிருந்தன. போட்டியாளர்கள் யார் குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிகமாக விளக்கு பொருத்துகிறார்களோ அவர்களே போட்டியில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவர் என்று சொல்லி போட்டியும் ஆரம்பிக்கப்பட்டது 


 குறித்த நேரத்திற்குள் தங்களால் முடிந்த அளவிற்கு விளக்குகளை பொருத்த, போட்டி நேரம் முடிந்த பின் ஒவ்வொரு மேஜையாக பொருத்திய விளக்குகள் கணக்கெடுக்கப்பட்டது. 


அதில் நீலா மட்டுமே அதிகபட்சமாக பத்துக்கு எட்டு விளக்குகளை பொருத்தி இருந்தாள். 

 அவளே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டாள். மேலும் இறுதி சுற்றில் எப்படி அவ்வளவு எளிதாக எட்டு விளக்குகளையும் பொருத்த முடிந்தது. மற்றவர்கள் ஐந்தை தாண்ட முடியவில்லையே? என நீலாவிடம் போட்டியை நடத்தியவர் கேட்க, நீலா சிரித்தபடியே தன் விளக்கத்தை கொடுக்க ஆரம்பித்தாள். முதலில் போட்டி என்றால் அதில் ஏதாவது சூட்சுமம் இருக்கும் என்று எனக்கு தெரியும். அதனால் விளக்கு ஏற்று ஏற்றும் முன்பே சில நொடிகள் தாமதமானாலும் பரவாயில்லை என்று நினைத்து, அந்த திரிகளின் முனையை நன்றாக பதப்படுத்தி எண்ணெயில் தோய்த்து வைத்தேன். அதனால் திரியின் முனையானது ஈரமடைந்திருக்கிறது என்பதை கண்டுபிடித்துவிட்டேன். தீப்பெட்டியை பற்றவைத்து ஒரே குச்சியில் எட்டு விளக்குகளும் பொருத்தி வைக்கும் பொழுது சரியாக மணி ஒலித்தது. ஆனால் மற்றவர்கள் சீக்கிரமாக பொருத்த வேண்டுமென்ற நோக்கத்திலேயே இருந்ததால் திரி ஈரமடைந்திருந்ததை கவனிக்கவில்லை என்று தான் கொண்ட வெற்றியின் ரகசியத்தை சொன்னாள். அவளை மற்ற அனைவரும் வெகுவாக பாராட்டினர் .


 எப்போதும் போட்டியில் சூட்சமம் இருக்கும் என்பதாக ஒரு கருத்து அவளால் சொல்லப்பட்டாலும் செய்வன திருந்தச் செய் என்ற சொல்லுக்கு ஏற்ப முதலிலேயே அந்த திரியை தன் போக்கிற்கு மாற்றி வைத்திருந்த நீலாவால் எட்டு விளக்குகளை ஒரே நேரத்தில் பொருத்த முடிந்தது.  


இந்த புத்திசாலித்தனம் இருந்திருந்தால் எவரும் போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருப்பர் என்ற உண்மையும் புலப்படுகிறது. 


 போட்டி என்பது சிந்திக்க மட்டுமே.

Sunday, July 9, 2023

ஜொலிக்கும் நினைவுகள் by Vidhya Nivash

 


நினைவுகள் ஆழமானது தோண்ட

 தோண்ட ஊறும் ஊற்று போல்

 சுவையாக,மணமாக,உணர்வாக பல

 விதமாக ...சிறு செல்கள் சேர்ந்து

உயிராக உருவெடுப்பது போல்

 இங்கு காற்றில் கரைந்து மேகத்தில்

 மிதக்கும் பறவைப்போல் நினைவுகள்

 ஒன்றை ஒன்று தொட்டு, கலைந்த

 பூக்களை எடுத்து ஒன்றாக தொடுத்த

 ஒரு மாலையாக, வைர மாலையாக

 ஜொலிக்கிறதே.


நேற்றைய பதிவான பள்ளி

 நினைவுகள் வழி வழியாக வந்த

 பாதையில் நடந்த செல்ல

 குறும்புகளை ,நினைவுகளை

 தொட்டு சென்றது.ஒரே கூடத்தில்

 இருபதுக்கும் மேல் ஒரே

 குடும்பத்திலிருந்து படித்துள்ளோம்

 என்பதை நினைக்கும் போது

 ஆச்சரியமாக உள்ளது. 

கண்ட காட்சி அற்புதம் by Veena Shankar



 கண்ட காட்சி அற்புதம்


கண்டதும் மயக்கம் கொள்ளச் செய்யும் மேனியோ?


செந்நிறமும் பொன்னிறமும் மின்னும் வடிவமோ?


நீராடி நீராடி குளிர்ச்சியடைந்த மனமோ?


சரீரத்தில் தினம் பூத்து பூத்து குலுங்கும் சோலையோ?


புன்னகையும் பொன்னகையும் ஒருசேர கொண்ட களையோ?


அழகு செய்ய செய்ய சிம்மாசனம் அடையும் பொலிவோ?


சூடிய பூவும் அழகு பட்டாடையையும் கொண்ட திருவுருவமோ?


காண காண மனம் குளிரச் செய்யும் நறுமணமோ?


வாயால் பாட பாட கருணை ஒளி கொடுக்கும் சுடரோ?


கண்டதும் காதல் கொள்ள தூண்டும் காட்சியோ?


ரசித்ததில் காலம் போனதும் நான் மயங்கியதும் சொல்லவும் முடியுமோ? 


அழகும் சுகந்தமும் ஒரு சேர திளைக்கும் இடமோ?


ஆஹா ! அற்புதம். உற்சவ மூர்த்தியின் திருமஞ்சனமும், நெஞ்சை கொள்ளை கொள்ள நான் பெற்ற வரமும்


வாயினாற் பாடி மனதினால் சிந்தித்து...

Saturday, July 8, 2023

பள்ளிக்கூடம் by Veena Shankar

 


பள்ளிக்கூடம்


இங்கே வாழ்க்கை பாடமும் படித்ததை சொல்லவா?


தோழிகளோடு பழகிய அருமையான நாட்களை சொல்லவா?


சினிமா படங்களின் விமர்சனம் கேட்டதை சொல்லவா?


கேள்விக்கு விடை தெரியாமல் நின்றதை சொல்லவா?


ஆசிரியைக்கு சில சமயம் உதவியதை சொல்லவா?


அங்கே அறியாமை விலகி போனதை சொல்லவா?


இடைவேளையில் கேலி பேச்சுகள் அரங்கேறியதை சொல்லவா?


மைதானத்தை எனதாக்கிக் கொண்டதை சொல்லவா?


ஆசிரியர்களுக்கு வணக்கம் சொல்லி பழகிய கரங்களை நினைக்கவா?


வேலியாய் தோழிகள் சூழ குழு தலைவியாய் அமர்ந்ததை சொல்லவா?


தேர்வில் பார்த்து கூட எழுத தெரியாமல் விழித்து நின்றதை சொல்லவா?


காலையிலேயே என் உணவு தோழிகளால் களவாடப்படுவதை சொல்லவா?


மதிய வேளையில் வெறும் வயிறறுடன் இருந்ததை சொல்லவா?


அதையும் வீட்டில் சொல்லாமல் மறைத்ததை சொல்லவா?


ஆய்வாளர் வருகைக்காக நோட்டு புத்தகங்களுக்கு செய்த ஒப்பனையை சொல்லவா?


விளையாட்டு நேரத்தை எதிர்பார்த்து நின்றதை சொல்லவா?


பள்ளிபருவம் விரைவில் முடிந்ததை எண்ணி

தவித்ததை சொல்லவா?


பெற்றோரின் பிள்ளை செல்வங்களின் சோலை இந்த கல்வி சாலை


பள்ளிக்கூடமும் நம் நினைவு விட்டு நீங்கா ஓர் இடமே என்று மறைக்காமல் சொல்லவா?

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...