Tuesday, July 18, 2023

இந்த வாரத்தலைப்பு கிணறு by Veena Shankar

 



கிணறு


தோண்ட தோண்ட செழுமை


அங்கே கிடைக்கும் தண்ணீரோ

 இனிமை 


தாகத்தோடு குடித்தால் அருமை


கிடைத்த சுவையில் நான் அடிமை


கோடை காலத்திலும் இல்லை வறுமை


அயல்நாட்டில் காண முடியாத பெருமை


எடுக்க எடுக்க குறையாத வளமை 


நெடுநாளைக்கு பிறகு தீண்டினாலும்

 உணர்ந்த இளமை


உன்னை கையாள்வதுமே ஓர் திறமை


தீண்டியவர் மட்டுமே உணரும்

 பெருமை


ஆட்கள் இல்லாமல் பார்த்ததில்லை

 உன் தனிமை


ராட்டினமும் வாளியுமே உன் ஆளுமை


இறைப்போருக்கு தருவது வலிமை


நான் தீண்டாமல் போனாலும் நீ என்

 உடைமை

2 comments:

  1. தீண்டாது போனாலும் ..நீ என் உடைமை..வார்த்தை பிரயோகம் மிக அருமை

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிருத்திகா

      Delete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  பன்முகம் கொண்டவள் அவள் சிந்தனையிலும் வல்லவள் அவள் எதிர்நீச்சல் போட்டும் வாழ தெரிந்தவள் அவள் எதிர்மறை எண்ணங்களை சிதைப்பவளும் அவள் சுகமான சு...