இருக்கும் இடம் தனிமை என்றாலும் பின்னால் இருக்கிறது ஓர் காக்கும் படை
மரமே சூரிய ஒளிக்கு ஏற்றவாறு வளைந்து கொடுத்து இயற்கைக்கு அதன் வழி வாழ இருக்கும் போது செயற்கையான சிலவற்றிற்கு மனிதன் மனம் மாறுவதும் கொடுமையே
திரும்பிப் பார் ஓர் உலகம் தெரிகிறது என்று இளைஞர்கள் பட்டாளத்தை காட்டுகிறது நமக்கு
வாழ்க்கையை ஓட்ட பாதை தேடி வந்தவனுக்கு பாதை தடைப்பட , அடுத்தது என்ன என்ற சிந்தனை மேலிட, அங்கேயே அமர்ந்து கீழே பார்க்க அங்கே சிறகொடிந்த பறவை, பறக்க எத்தனிக்க, தன்னுடைய தவறை களைந்து புது மனிதனாய் கிளம்பினான் அங்கிருந்து
புத்தருக்கு போதி மரம். இவனுக்கோ ஓர் தடைப்பட்ட பாதை, சிந்தனை ஊற்றோ பாறையில்
ஏர் முனையானாலும் கூர் முனையானாலும் குத்து பட்டவருக்கு மட்டுமே வலிக்கும்

குத்தூசி பட்டால் வலிகள் சில நேரம்
ReplyDeleteசொல் ஊசி பட்டால் வலிகள் நிரந்தரம்
கடந்து போகத்தான் கற்றுக் கொண்டிருக்கிறேன்
முடிந்த பாடில்லை
அது வாழ்நாள் பாடம் போல
புத்தரின் இறப்பு ஏற்றுக்கொள்ளுதலின் உச்சம்
சிறப்பான சிந்தனை வீணா
நன்றி
Delete