Tuesday, July 4, 2023

எதுவும் சிறப்பே by Veena Shankar

 


எதுவும் சிறப்பே 


திருமண கூட்டம் அலை மோதியது. மேடையில் அய்யர் மட்டுமே அமர்ந்து ஏதோ மந்திரம் சொல்லிக் கொண்டு யாகம் வளர்த்து கொண்டிருந்தார்.  


காலை ஆறு மணிக்கு சிகை மற்றும் முக அலங்காரத்திற்கு அமர்ந்த மணமகள், இன்னும் மேடைக்கு வரவில்லை. சரி மணமகளுக்கு தான் அவ்வளவு அலங்காரம். சும்மா பஞ்சகச்சம் கட்டும் மாப்பிள்ளைக்கு என்ன வந்தது. அவராவது வந்து மேடையில் அமரலாமே. மணி ஒன்பதாக போகுது. முகூர்த்த நேரம் நெருங்குகிறது. அதுவில்லாமல் அடுத்த கல்யாணத்திற்கு போக வேண்டியிருக்கு என்று கூட்டத்தில் பேசுவது மணமக்களுக்கு கேட்கவில்லை.


சிறிது நேரம் கழித்து மணமகன், மணப்பெண் பெற்றோர் வந்து மேடையில் அமர, நாதஸ்வரம் இசைக்க , கூட்டத்தினர் பெருமூச்சு விட்டபடி தங்கள் வயிற்றையும் மாற்றி மாற்றி நிரப்பிக் கொண்டனர். இதற்கிடையே

மணமகன் எங்கே இருக்கிறான் என்று தேடித்தேடி அலுத்து போனது வந்திருந்த கூட்டம்.


ஒரு வழியாக மணப்பெண்ணின் அலங்காரம் முடிந்தது. அவளுக்கு காலை உணவு பெயருக்கு அலங்காரத்தின் நடுவே அவள் தோழியால் வழங்கப்பட்டது . மணமகளின் அறையிலிருந்து ஒரு பெண் வேக வேகமாக மணமகன் அறைக்கு நுழைந்து கதவை தாழிட்டு கொண்டாள். மணமக்களை எதிர்பார்த்து காத்திருந்த சில பேருக்கு இக்காட்சி தட்பட்டுவிட்டது. 


அறை மணி நேர இடைவெளியில் மணமகன் தன் அறையிலிருந்து மேடைக்கு வந்தான். மணப்பெண்ணை அழைத்து வர அய்யர் பெண்ணின் தோழியரை ஏவ, மணமகளும் மேடையேறி தன்னுடைய மணப்பலகையில் மணமகன் பக்கத்திலே அமர்ந்தாள்.


இதனை பார்த்தவர்கள் ஒன்றும் புரியாதவராய் அடுத்தவரை பார்த்து மணமகனுடைய அறையில் ஒரு பெண் தானே உள்ளே போனாள். ஆனால் திரும்பி வரும் போது மணமகன் போல் வந்து மேடையில் அமர்ந்திருக்கிறானே? என்று கேட்க, அதை கவனித்த மணமகனின் அத்தை, " அது ஒண்ணுமில்லைங்க! அவன் காஸ்டும் டிசைனரா வேலை பார்க்கிறான். எத்தனையோ நடிகைகளுக்கு அலங்காரம் பண்றவன் கல்யாணத்துல என் வருங்கால மனைவிக்கு நான் தான் அலங்காரம் செய்வேன் என்று அடம் பிடித்து பொம்பள வேசம் போட்டு தன் மனைவிக்கு அலங்காரம் பண்ணியிருக்கிறான். அதுவுமில்லாம தான் தான் மாப்பிள்ளை என்று தெரியாதவங்களுக்கு ஒரு ஆண், மணபெண்ணுக்கு அலங்காரம் பண்றான் ன்னு தெரிந்தால் அவங்க, என் பொண்டாட்டிய தப்பா பேசிடுவாங்கன்னு சொல்லி வேசம் போட்டுகிட்டான்" என்று சொன்னதும் மூக்கின் மீது விரல் வைத்தனர் கதை கேட்டவர்கள்.


மணப்பெண் ரொம்ப அதிர்ஷ்டசாலி என்று தங்களுக்குள் பேசி அட்சதை தூவ தயாராகினர்.   


எதுவும் சிறப்பே வாழ்வில் மறக்க முடியாத சம்பவங்களும் அதனின்று தொடரும் நினைவுகளும்.

2 comments:

  1. ஆம் நம் மனதுக்கு பிடித்தவர்கள்
    ஓசையின்றி பேசினாலும்
    சத்தமின்றி திட்டினாலும்
    எல்லாம் சிறப்பே

    நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான் மாறி மாறி எழுதுவீங்களா

    நாங்களும் எழுதுவோம் சூப்பர் சகோ

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரரே. இரு கை ஓசையை விட பல கை ஓசையும் சிறப்பு, இசைக்கு மெருகூட்ட

      Delete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...