Thursday, July 6, 2023

படமும் கருத்தும் by Veena Shankar


 காதல் கோட்டைக்கு நுழைவு வாயில் இதயத்தால்

கற்பனை அவசியம் காதல் கொள்ள, பாதையும் அவசியம் கவர்ந்து செல்ல,

காவலும் அவசியம் கடந்து வெல்ல, காதல் வானில் பறக்க, சிறகும் தேவையோ? 

மன சிறகுகள் போதும். வா! வா! தார்ச்சாலையில் பறந்து செல்வோம், மேக அலையில் மிதந்து செல்வோம்

பனி மலையில் சறுக்கி செல்வோம்

 இரு இதயங்களின் சங்கமம். ஓர் இதயத்தை வெட்டி மறு இதயத்துக்குள்ளே புகுத்திய தோட்டக்கலை மருத்துவ குழுவின் புதுமை , அருமை


 பசுமையான இதயங்களுக்கு இயற்கை போர்த்திய இதய வடிவான பசுமைக் கம்பளம்

இதயத்தின் வாசலை திறந்தால் பிரமிப்பு


பார்ப்பதற்கு பிரமிப்பாய் இருந்தாலும் குடி புக ஆளில்லை என் மனதில், அது ஏனோ?

மனத்தை திறக்க வாயிலும் இங்கே


மயங்கிய மனங்கள் எங்கே?

இருண்டு போகாத இரண்டு இதயங்களை உருண்டு திரண்டு எதிர்நோக்கும் பாதை

கோயிலுக்குள் செல்ல இருக்கும் தோரண வாயில் போல காதலின் இதயத்தை திறக்கும் வாயில் தானோ இந்த இதய வாசலும்



4 comments:

  1. பூட்டிய இதயம்

    துரு ஏறி

    துவண்டு கொண்டிருக்க

    அவளின் நினைவு

    என்றும் பசுமையாக

    களை எடுக்க எடுக்க

    உள்ளே துளிர்த்து கொண்டிருந்தது

    ---சின்னா

    ReplyDelete
  2. நன்றி சகோதரரே. அருமை காதலியின் துளிர்விடும் நினைவு

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...