முடிந்த வாழ்வின் தொடர்ச்சி தேடுதல்
ஆணின் பாரம் என்றும் முடிவதில்லை,
எப்பயணத்திலும் தொடரும்
விரட்டும் பசியால் முதுமையிலும்
மிரட்டும் நடைபயணம்
தான் அமர்ந்தால் இல்லாள் சுமப்பாள்
இல்லாள் சுமந்தால் தான் வருந்துவார்
இளவயதில் சுமந்து கெட்டதால்
தளர்ந்து போனது நடை முதிர்வயதில்
பாசம் என்ற காரணத்தை சொல்லி
வேசம் வென்றது கையில் காசு இருந்த
வரை
காசும் போனது வேசமும் கலைந்தது
புத்தியும் வந்தது மீண்டும் சம்பாதிக்க
தன்னை போல் தெருவில்
விடப்பட்டோருக்காக
வழி தெரியாமல் விழி பிதுங்கி
நின்றாலும்
உறவுகளையும் சினேகங்களையும்
துறந்து தனிமை பயணம் எங்கோ?
குடும்ப பாரம் இறக்கி தன் பாரத்தை
சுமந்து பயணம் தன் ஆயுளை கடக்க
எண்ணி
எதிர்பார்ப்பும் இல்லை அதனால்
ஏமாற்றமும் இல்லை
பயணத்தின் நோக்கம் தெரியவில்லை
பரந்த வானம் புலப்படவில்லை
பக்கத்தில் இருக்கும் பொருளும்
தேவையில்லை
தூரத்தில் உள்ள பரம்பொருளை
எண்ணுவதால்

வார்த்தைகளின் பிரயோகம்
ReplyDeleteஉங்களிடம் தான் கற்க வேண்டும்
கட்டணமின்றி கற்பிக்க முடியுமா
வீணா நன்று தங்கள் எழுத்து
மிக்க நன்றி. நானும் மற்றவரிடமிருந்து கட்டணமில்லாமல் கற்று கொண்டு தான் இருக்கிறேன் சகோதரரே
Deleteஆவி உள்ளவரை
ReplyDeleteஎல்லா காலகட்டத்திலும்
நம் தேடல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது
பணம் இருக்கும் இடத்தில் பாசத்தை தேடுகிறார்கள்
பாசம் இருக்கும் இடத்தில் பணத்தை தேடுகிறார்கள்
காதல் சலிப்பு பிரிவை தேடுகிறார்கள்
பிரிவிலே காதலை தேடுகிறார்கள்
எப்படியும் நம் தேடல்கள் தொலைந்த பாடில்லை
நேரத்திற்கும் தேடலுக்கும் இடைப்பட்டதே வாழ்க்கை
எண்ணம் ஒன்றே நம் வாழ்க்கையை தீர்மானிக்கும்
அடிப்படைக்கு நாம் ஓடித்தான் ஆக வேண்டும்
உண்மை
Delete