மழைக்கு முன் அமைதி என்றால்
மழைக்கு பின்னும் மாயான அமைதி.
எதுவுமே நகராமல் நிற்பது போல்
சோம்பல். புது தடத்தில் நடக்கும்
எறும்பு நகர்கிறது போகலாமா
வேண்டாமா என்பது போல் ,தொட்டில்
இருக்கு ஆடவில்லை. சலவைக்கல்
இருக்கு துவைக்க ஆளில்லை .
கொடியிலிருந்து சொட்டும் தண்ணீர்
துணிக்கு பதிலாக தொங்கும்
கவ்விகள். அதில் பயணம் செய்யும்
வண்டுகள். எந்த தொல்லையும்
இல்லாமல் ஊறும் மரவட்டைகள்
பறிக்க ஆளில்லாமல்
பூத்துக்கூழுங்கும் பூக்கள் .ஜன்னல்
ஓரத்தில் நின்று ஏங்கும் மங்கை
போல் சூரியன். எங்கும் மணக்கும்
மண்வாசனை மனிதனை தவிர
அனைத்தும் மெதுவாக நேரத்தை
நகர்த்த வெட்டவெளியில் ஊருகிறது.
ஊரணியில் நீர் ஏறுகிறது. மண்
விதைக்கு பாய்விரித்து
காத்திருக்கிறது.

உண்மை வித்யா
ReplyDelete