Wednesday, July 5, 2023

கண்ணாடி உலகம் by Vidhya Nivash

 


கண்ணாடி உலகம் பார்க்கும்

 இடமெல்லாம் உன் முகம் .வீசும்

 காற்றில் உன் வாசம். இருளில் ஒர்

 வெளிச்சம் சுற்றுவது போல் ஒர்

 நினைப்பு ஆனால் நிற்கிறேன் .பல

 கோணங்களில் சிதறிய பிம்பங்கள்

 ஒன்றாய் சேர்ந்தால் சிரிக்கும்

 முகங்கள் பல..

ஒளியும் ஒலியும் ஒருமித்த ஒர் ஓவியம்

ஒழுகும் ஒலியில் ஒழியா

 ஒளிக்கற்றைகள் ஒளிர்கின்றன. 

4 comments:

  1. எல்லாம் கண்ணாடி போல் உள்ளதை
    அப்படியே காட்டிவிட்டால் உலகத்தில்
    எதிர்மறை எண்ணம் விளையாது
    நம் மனம் கல்லாய் இருப்பதாலே
    பலர் மனதை நாம் கண்ணாடி
    என்று நம்பி விடுகிறோம்
    அதில் கீறல் விழுந்த பின் ஒரு முகத்தை
    பல முகங்களாக காண்கிறோம்
    பெரிய வருத்தத்துடன் -- நன்று வித்யா

    (சும்மா இந்த தலைப்பை பார்த்த உடனே எழுதணும்னு தோணுச்சு)

    ReplyDelete
    Replies
    1. உண்மை,நன்றி உங்களுடைய அர்த்தமுள்ள வரிகளுக்கு ...🙏

      Delete
  2. கண்ணாடி தான் நம் மனம். அருமை வித்யா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...