Friday, July 7, 2023

மின்னும் வெளி by Vidhya Nivash


 காற்றில் ஆடும் ,மழையில் நனையும்

 புல்வெளியின் மத்தில் நாங்கள் மின்னும்,

 வண்ணம் மாறும், மின்சாரம் கொண்டு

 ஆடும் புல்வெளி.இங்கும் இடி இடிக்கும்

 மழை பெய்யும் ஆனால் நாங்கள்

 நனையவும் , வளரவும்,  வாடவும் மாட்டோம்.

 மின்சார தரை விரிப்பு கண்களுக்கு

 மட்டுமே விருந்து. பல நேரம் நிஜமென்று

 பகட்டிற்கு மாட்டிக்கொள்ளும் மனம் சுட்டால்

 மட்டுமே தெரியும் அதன் நிறம் சில நேரம்.  

மின் வேலியில் மாட்டிக்கொள்ளாத

 வரை தப்பிக்கும் மான் போல

 துள்ளிவிளையாடு மனமே..

 

2 comments:

  1. அழகான படம் மற்றும் கருத்து வித்யா

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...