Saturday, July 8, 2023

ஆணிவேர் ஆரம்ப கல்வி by Vidhya Nivash

 


பள்ளிக்கூடம் ஆம் ஒரு கூடத்திலேயே 

தான்படித்தோம்.தென்னைக்கூரையில்

 வேய்ந்த அழகான கூடம்.தடுப்பு சுவர்

 இல்லாமல் அருகருகே அடுத்த வகுப்பு

 நினைத்தாலே வியப்பு எந்த

 கவனக்குறைவும் இல்லாமல் எப்படி

 படித்தோம்.எந்த சுமையும் இல்லை

 கவலையும் இல்லை.அப்போதே யோக

 சொல்லித்தரப்பட்ட பள்ளி,காலையில்

 நடக்கும் கூட்டத்தில் நேராக தலையில்

 கைக்கூப்பி உட்கார வேண்டும் எதற்கு

 என்றே தெரியாது இப்போது

 அதற்கான தனி சிறப்பு

 வகுப்புகள்.வண்ண உடையில்

 சென்றோம் எந்த வேறுபாடுமில்லை

 கல்வி பசி மட்டுமல்ல பலரின் வயிற்று

 பசி தீர்த்த கூடம்.மதிய வேளையில்

 வீட்டிற்கு சென்று உணவு சாப்பிட்டு

 வருவதிலே எவ்வளவு குதூகலம்.

ஆசிரியர்களை எல்லாம் அம்மா என்றே

 அழைத்தோம். இரண்டே தெருவில்

 பள்ளி அதிலும் வழியில் இருக்கும்

 தோழிகள் வீடு சென்று அழைத்துச்

 செல்வதில் ஆனந்தம்.பல

 நினைவுகளை தந்த பள்ளிக்கூடம்

 இன்று முழுவதும் கட்டிடம்

 ஆனது.அனைவருக்கும் ஓர் உணவு

 கிடைத்த இடம் இன்று இப்போது

 அவரவர் வசதிக்கேற்ப பல வண்ண

 கலவையில் விற்கப்படுகிறது. 

ஆணிவேர் ஆரம்ப கல்வி அதை

 கட்டாயப்படுத்தாமல் கலையாக தரும் 

 கலைக்கூடம் மீண்டும் தேவைதானே.

7 comments:

  1. மிக மிக அருமை வித்யா

    ReplyDelete
  2. அருமை வித்யா

    ReplyDelete
  3. இதுவும் பருவகால மற்றும் பள்ளி நினைவு தான்

    ReplyDelete
  4. மண் வாடை
    ---------------

    கொட்டும் பணியிலே தட்ட எரிச்சு
    கூத காஞ்சா உடம்பு முறுக்கேறும் மயிர் எல்லாம் வெடச்சு நிக்கும்

    பொரிகடலை வித்துவருவன் பத்துகாசுக்கு பாக்கெட் ரெம்ப வாங்கிட்டு பல்லு வெளக்குறதுக்குள்ள பாதி திண்டு இருப்பேன்

    கரிக்கட்ட எடுத்து ரெண்டு கடி கடுச்சு மெண்டு விரலை வச்சு நான்தெச்சு
    காக்க குளிக்குளிச்சு அதே டவுறச போட்டுக்கிட்டு அரக்க பறக்க கஞ்சி குடுச்சு

    ஆத்தாகிட்ட காசு வாங்கிட்டு பள்ளிக்கூடம் நான்போன வீதியில சீயான் வரும் சியம் முட்டாய் வித்துக்கிட்டு


    வாட்சி ஒன்னு நான்வாங்கி மாணிக்கட்டுல கட்டிக்கிட்டு ஒய்யாரமா நடக்கையில
    கன்னத்துல ஓசி ஒன்னு ஓடுவார் பாசத்துல

    பள்ளிக்கூடம் போயி நின்னு ஏட்டு எடுத்து வாத்தியார் பெயரை படுச்சா
    மாரியப்பன் மகன் பூமி வந்திருக்கமாட்டான்
    அவன் வீடுபோயி தூக்கி வந்து ஒக்காரவைப்போம் வகுப்பறையில

    மிதிவண்டி ஒன்னு கேடச்சா குரங்கு பெடல் நான் போட்டு தத்தி தத்தி ஒட்டிடுவேன் எருமைமாடு முட்டி கிழவிழுந்து முட்டி தேச்ச நத்தத்துல மண்ணல்லி நர நரைனு தெச்சிருவேன்

    சனி ஞாயிறு காக்க விரட்ட போன காக்காவை வேற்றவிட்டு நான் தின்பேன் பத்து கொத்து

    மாடு மேய்க்க போகையில போற வாரா வெள்ளடை காம்பை சூப்பி பால் குடிப்பேன் வலிக்காம சலிக்காம

    மீசை கொஞ்சம் வந்துருச்சு பீடி எடுத்து பத்தவச்சா பாவி பய எங்க அப்பன் அன்னைக்கு தான் அந்தப்பக்கம் வருவானா சேத்தாண்டி வேஷம் போட்டு சேதச்சு புட்டன் காட்டுக்குள்ள

    அங்க புடுச்ச ஓட்டம் சென்னைவரை நிக்கல
    இங்கவந்து நாலு எழுத்து நான் படுச்சு முடுச்சப்ப பன்னாட்டு வேலையில பாதி உசிரு போகுதையா

    ---சின்னா

    ReplyDelete
  5. அருமை,மண் வாடை படிக்க படிக்க கண் முன்னே வந்து போகுது நிழலாக நிஜங்கள்👌

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...