Friday, December 29, 2023

2023 விண்மீன்கள் குழுவிற்கு நன்றி by Vidhya Nivash



இந்த குழுவில் இருக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் .கடந்த வருடம் இதே நாள் தினமும் எண்ணத்தில் வருவதை,கடந்ததை,ரசித்ததை,கைப்பேசியில் மனதில் படம்பிடித்ததை பதிவிட முடிவு எடுத்தேன்.இந்த குழுவில் பதிப்பாசிரியர் பொறுப்பு கொடுத்தவுடன் தோன்றிய எண்ணம் ஆனால் அப்போது பாதியில் நின்றது.

ஆரம்பித்த சில தினங்களில் வேதவல்லி அம்மாவின் வார்த்தைகள் கொடுத்த உற்சாகம் மேலும் ஊக்கப்படுத்தியது. முடிந்த வரை முயற்சித்தேன் ,அடைந்தேன் நிறைவு.

பல தினங்கள் விளையாட்டாக ,சில தினங்கள் அதிகமான எதிர்ப்பார்ப்புடன், சில நேரம் குழப்பமாக எழுதினேன். 

ஆனால் அதையும் படித்து ,சிலர் அதை பற்றி விளக்கம்  கேட்டது நல்ல தாக்கத்தை தந்தது.

இந்த பயணத்தை அடைய உறுதுணையாக இருந்தது .எல்லோரும் அறிந்தவரே என்னில் மூன்றுமடங்கு அவரிடம் இருந்து பதிவு வந்தது.அதனாலே இந்த வெற்றியை அடைய முடிந்தது. போகும் பயணத்தில் சரியான துணையிருந்தால் எதுவும் சாத்தியமே. நன்றி வீணா உங்களுடைய நேரத்தை ஒதுக்கி ஒவ்வொரு நாளும் என்னை ஊக்கப்படுத்திய உங்கள் வார்த்தைகளுக்கு..பல நேரம் எழுதியது ஒன்று ஒவ்வொருவரின் பார்வைக்கு ஏற்ப அது பல வடிவங்கள் எடுத்தது. ஒரு படைப்பாளியாக அது பல பிறப்புக்கள் எடுத்தது மிக்க மகிழ்ச்சி,பூரிப்பை தந்தது.

எழுத தொடங்கியுடன் இயற்கையின் ரசிக்கையாய் மாறி எதை பார்த்தாலும் படம்பிடித்து எழுத தோன்றுது.ஒவ்வொருவருக்குள்ளும் உறங்கும் கலைஞனை அடையாளம் காண ஒரு முகவரி தேவை.அந்த முகவரி விண்மீன்களே .

வேதவல்லி அம்மா மட்டும் அல்ல அவருடைய மகளும் பல நேரத்தில் சோர்வு தட்டும் போது ஒரு தட்டு தட்டும்  அவருடைய குறுஞ்செய்தி. 

மேலும் இந்த பயணம் தொடர,எழுத்துக்கு  அடையாளம்,ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.

இந்த மாதிரி ஒரு  நல்ல வாய்ப்பை தந்து,நேரம் கிடைக்கும் போது உங்களுடைய வார்த்தைகளால் மட்டும் அல்லாமல் உங்களுக்கிடைக்கும் வாய்ப்பையும் தந்து அழகு பார்க்கும்  அகிலாவிற்கு மிக்க நன்றி.

அகிலா மற்றும் கீதாவிற்கு வேண்டுகோள்,

நீங்கள் அடிக்கடி போடும் சமூக வலைத்தள பதிவுகளையும் ,நீங்கள் செய்யும் சமூக சேவைகளையும் இன்னும் கொஞ்சம் பொதுநலத்தை சுயநலமாக வெளியிட்டால் பலர் மேலும் வெளிவர வாய்ப்பு இருக்கு .

6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வித்யா. உண்மை தான். துனையிருந்தால் எதுவும் சாத்தியமே, இங்கே போட்டி என்பது இல்லாது வரை. நானும் உங்கள் படத்திற்கு எழுத நினைக்கிறேன். சில நேரம் வேலை பளு காரணமாக முடிவதில்லை.

      இந்த வருடம் போல் அடுத்த வருடமும் வேறு பல சிந்தனையோடு உலா வருவோம் என்ற நம்பிக்கை வாக்கோடு உங்களை வாழ்த்துகிறேன் வித்யா.

      Delete
  3. நன்றி வீணா.கண்டிப்பாக 🙏

    ReplyDelete
  4. அருமை மா Vidhya.. உங்கள் எழுத்துக்களுக்கு ரசிகையாய்..கூடவே பயணிப்போம்..மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி..

    ReplyDelete
  5. நன்றி கிருத்திகா

    ReplyDelete

படமும் கருத்தும் by winmeengal

 'துன்பத்திற்கு துன்பம் கொடுங்கள் ' என்ற கலாம் ஐயா மொழிதலை என்றுமே முன்னெடுங்கள்! கஷ்டம் தானே வருகிறது; கழுத்துக்கு என்ன கத்தியா வரு...