Saturday, December 16, 2023

நித்தம் உதயம் மறைவு by Vidhya Nivash

 


ஓரே நாளில் மஞ்சள் வெயில் ,செவ்வானம் பார்க்க கிடைத்தால்..அதிர்ஷ்டம்.

உதயம் மறைவு இரண்டும் நித்தம் நடக்கிறது. அது எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் யாரும் அதை தடுக்க முடியாது என்று சொல்லும் இயற்கை.

எளிமையான ஒன்று முயன்றால் முடியும்.இதை வைத்தே இயங்கிய உலகம் இயற்கையோடு, அதுவே ஆரோக்கியத்தின் சான்று உடல்நலத்திற்கு மட்டும் அல்ல மனநலத்திற்கும் சேர்த்து.

பயணம் முடங்கி போனால் மனமும் முடங்கும்.சூரியனையும் நிலவையும் பார்ப்பதே அதிசயமாகி போன கட்டட நெரிசல்.எங்கோ இருந்து கசியும் வெளிச்சம் ஜன்னல் வழியே எட்டிப்பார்க்க.. அதுவும் இல்லாமல் ஆக்கிய திரைசீலைகள்.

மழை வேண்டும் வந்தால் வாழ இடம் இல்லாமல் போன அவலம்.இயற்கையின் சீற்றம் அல்ல செயற்கையின் ஆட்சி.

4 comments:

  1. உண்மை தான் வித்யா. செயற்கையின் ஆளுமை இயற்கையை தடுமாற செய்தாலும் வெல்வது ண்ணமோ இயற்கையே. அதனால் தான் வெள்ளத்தில் மிதக்கும் அவலம்

    ReplyDelete
  2. கடைசி வரி. நிதர்சனம் மா 👌👌

    ReplyDelete
  3. நன்றி கிருத்திகா

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...