கேட்டதில் பிடித்தது வாழ்க்கை அழகானது என்ற நிகழ்ச்சி 89.4 தமிழ் வானொலியில் வரும்.
இன்று ஒவ்வொரு நாளையையும் அழகாக்க இதை கவனிங்க.
மனதையும் ,உடலையும் சரியாக பயிற்சி செய்ய காலை நேரத்தை ஒதுக்குங்க.
சுய பிரதிபலிப்பு -அன்றைய பொழுதின் வெற்றி,தோல்வி,முயற்சி,உணர்வுகள்..
கண்டிப்பாக கற்றல்,அதுவும் சுய கற்றலுக்கான நேரம் ஒதுக்குங்க.
எதையும் ஏற்றுக்கொள், அனுபவி, நடப்பவற்றிற்கு பொறுப்பேற்க பழகு,அதில் கிடைக்கும் பாடம்,என்றும் நினைவில், நன்றி, நன்றி உணர்வு, கடைசியாக நம்பிக்கை.
மேலும் பெற்றதை பகிரும் போது வாழ்க்கை மேலும் அழகாகும், மகிழ்ச்சியாகும்.
மகிழ்ச்சியோடு சேர்ந்து மகிழ்வோம். அதை ஆச்சரியக்குறி போட்டு பார்க்காமல் நாமும் வளர்வோம்.

உண்மை வித்யா
ReplyDelete