Friday, December 8, 2023

இந்த வார தலைப்பு "மூக்கு கண்ணாடி" by Vidhya Nivash

 


அது என்ன மூக்கு கண்ணாடி ஆடி கண்ணுக்கா இல்லை மூக்குக்கா..

மூக்கே அதை சுமப்பதால் இந்த பெயரோ!

இதே மாதிரி மூக்கிற்கு அணிந்தால் என்ன? சல்லடை ஆடி! கண்டிப்பாக துப்புரவு தொழிலாளருக்கு பயன்படும்.

உடலின் அங்கமாக மாறி போனாய். உன்னை அணிந்த பின் கண் சோம்பேறியாக ஆக்கப்பட்டது.

உன் துணை இல்லையென்றால் கண்ணே தெரியாமல் போனது போல் உணர்கின்றனர். 

இயற்கை ஆடியை தொலைத்து செயற்கை ஆடியை அணிந்து இயற்கையை ரசிக்கிறார்கள்.

இழந்ததை தேட உன் துணை தேட கடைசியில் இருப்பதை தொலைக்கிறோம்.

அளவிற்கு மிஞ்சினால் எதற்கும் நாம் அடிமை என்பதற்கு மூக்குகண்ணாடியே உதாரணம்.




2 comments:

  1. உண்மை வித்யா. அருமையான கருத்து

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...