கடைசியாக கொட்டி தீர்த்த மழை
துளித்துளியாய் அணிவகுத்து நிற்கும்
மழைத்துளியை தாங்கி நிற்கும் கொடி
கம்பிகள் சுமையை சுமந்த உடல்
இன்று நீர் சுமக்க குளிருதே அதற்கு
மேலே மின்சாரத்தை கடத்திச்
செல்லும் மின்கம்பிகள் யாரும்
அருகில் வரவேண்டாம் என்று ஆந்தை
போல் முழிக்க மழையில் கூட்டில்
அடங்கி இருக்கும் குருவிகளின் காதல்
கீதம் கண்டு காற்றில் உரசி
கொள்ளும் தென்னை மரங்கள்
மழையோடு வீசும் காதல் கீதம்
ஊரெங்கும் வீச அடங்கிய ஊர்
அடங்காதா தலைவியின் உள்ளம்
தன்னை கடத்த ஆளில்லாமல் மணித்
துளியை கடத்திக் கொண்டிருக்கே..

ஆகா எதைப் பார்த்தாலும் கவிதை எழுதுறீங்க அருமை வித்யா
ReplyDeleteநன்றி😊
Deleteஉங்க கவிதைக்கு என்னுடைய கொசுறு கவிதை
ReplyDeleteகாலையில் உன் சிந்தை
ReplyDeleteகண்ணம்மா
என் மண்டையில்
ஓடுதடி கண்ணம்மா
பார்க்கும் பகல் எல்லம்
கண்ணம்மா
உன் போல் காட்சி தெரியுதடி
கண்ணம்மா
வாங்கும் மூச்சினிலே
கண்ணம்மா
உன் வாசம் தோன்றுதடி
கண்ணம்மா
சோற்று பருக்கை எல்லாம்
கண்ணம்மா
உன் முகம் தோன்றி மறையுதடி
கண்ணம்மா
ஆற்றில் குளிக்கையிலே
கண்ணம்மா
உன் தேகம் தெரியுதாடி
கண்ணம்மா
தூங்கும் வேலையெல்லாம்
கண்ணம்மா
கண்கள் ஏக்கம் கொள்ளுதடி
கண்ணம்மா
(கண்ணம்மாவை பாரதியிடம்
கடன் வாங்கி எழுதியது நானும் கவியாக)
----சின்னா
அருமை தோழரே
Delete