Tuesday, October 3, 2023

காடும் வீடும் by Vidhya Nivash



புதுமையை தேடி திக்கு தெரியா

 காட்டில் மாட்டி அவதிப்படுவதை விட

 தெரிந்த தடத்தில் பழக்கப்பட்ட

 வழக்கத்தில் வீட்டில் வாழ்வது மேல்,

 ஆனால் அந்த பழக்கம் வழக்கத்தை

  சிந்திக்க ஒரு முறை ,பிறரின்

 எண்ணங்களுக்கு சமமான மதிப்பு

 கிடைத்தால் வெளியில் புதுமையை

 தேட வேண்டிய அவசியமே

 இல்லை.புது புது தேடலுக்கு விடை

 கிடைக்கும் வீட்டிலே...

காட்டில் சுதந்திரமாக சுற்றும் மிருகம்

 விழித்த நிலையில் நடமாட ...

வீட்டில் மனித உருவில் உறங்கும்

 மிருகம் விழிக்க..

 வீடும் காட்டை நோக்கி நகர்கிறது

 தன்னாலே!

4 comments:

  1. மிக மிக அருமை வித்யா

    ReplyDelete
  2. அருமை வித்யா

    ஒரு கவிதை எழுதுங்க ஒரு ஆர்மி சோல்ஜர் போருக்கு போறாங்க அங்க போர் நடந்திருக்கிற அப்போ அவன் உயிரோட வருவானா என்னனு தெரியல அப்ப அவனுடைய காதலிக்கு ஒரு கடிதம் எழுதனும் அந்த சிச்சுவேஷன்ல பேனாவும் இல்லை பேப்பரும் இல்லை , அவன் அவனோட எண்ணத்தாலே ஒரு கடிதம் எழுதுகிறான் இதுதான் சிச்சுவேஷன் இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி இருக்கணும்

    வீணாவையும் எழுத சொல்லுங்க

    சிறந்த கவிதைக்கு பரிசு உண்டு

    ReplyDelete
  3. நன்றி சின்னா.கண்டிப்பாக 👍

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...