கேள்விகள் பல இருக்கு ஆனால் அர்த்தமுள்ள கேள்விகளைவிட அர்த்தமற்ற கேள்விகளே அதிகமாக விமர்சிக்கப்படுகிறது.கேள்விகள் மனதிலே பிறந்து சில மழுங்கடிக்கப்பட்டு மடிந்துவிடுகிறது. சில எப்போதும் விழிப்புடன் லாந்தரை கையில் ஏந்தி மினிக்மினிக்கென்று எரிக்கிறது.நேரம் கிடைக்கும் போது வெடிக்கிறது.
சில கேள்விகள் இங்கே...
அதிகமாக கேள்வி கேட்டபரை விட்டு நெருங்கியவரும் விளக்குவது ஏன்?
தான் சொல்லுதை மட்டும் ரசித்து மறுச்சொல் பேசா மடமை வேண்டும்.ஆனால் படபடவென கேள்வி கேட்பாள் என்றே பேசாமல் விளக்குவது ஏன்?
தலையாட்டி பொம்மை மட்டும் வேண்டும்.இதுவும் பழக்கப்பட்டு வந்தது.அதை மாற்ற முடியாதோ!
பல நாள் கேள்வி இந்த தீட்டு. அதெப்படி தொட்டவுடன் பற்றும் பிறரை??
வேலைக்கு போகலாம்,வெளியவும் போகலாம்,ஆனாலும் சிலவற்றுக்கு மட்டும் தடை ஏன்?
பெண்ணே சக்தி ,வீட்டின் வேர் அதெல்லாம் சரி அவளை மட்டும் ஒதுக்குவது ஏன்? ஆண் பிள்ளையையும் குளிக்காமல் வந்தால் ஒதுக்க வேண்டியதுதானே?
எல்லா சுதந்திரமும் உண்டு ஆனால் கைகளை மட்டும் கட்டுவது ஏன்?
பிறர் மனம் புண்பாடா கேள்விகள் வேண்டும்.கேள்விக்கு பதில் கேள்வி என்று ஒருவர் வாயை மூடுவது ஏன்?
எல்லோரையும் சரிசமமாக நினைத்து கேள்விகளை ஆதரித்து போனால் என்ன?
பலரை விமர்சிக்கும் முன் தன்நிலை நினைத்து கேட்டால் ஆரோக்கியமாக இருக்கும் கேள்வி.

அருமையான பதிவு வித்யா
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete