Thursday, October 12, 2023

சிந்தனை துளிகள் by Veena Shankar

 


உன்னை கதவின் இடையிலிருந்து என்னை மறைத்து ரசித்தேன்


உன் புன்னகையை என் விழியால் படம் பிடித்து மகிழ்ந்தேன்


உன் விழியால் என் நிஜத்தை ரசிக்க நிமிர்ந்து நின்றேன்


உன் கன்னத்தில் விழுந்த குழியை என் கரங்கொண்டு தாங்க நினைத்தேன்


உன் கால்கள் என் நிழல் தொடர அசையாமல் நின்றேன்


உன் அழுகுரலுக்கு என்னை மறந்து உன்னை ஏந்தினேன்


உன் இதழ் விரிய நான் சோறு ஊட்டி சிலிர்த்தேன்


உன் கைவிரல் கோர்த்து என்னோடு நடைக்கையில் பெருமிதம் உணர்ந்தேன் 


நீ என்னை கட்டியணைக்க நான் உனக்கு முத்தம் கொடுக்க மகிழ்ச்சியின் எல்லைக்கு சென்றேன்


உன்னை இப்படி தேவதையாய் பெற்றவள் யாரோ என நினைத்து மெய் மறந்தேன்


உன் மேல் பொய்யான கோபம் கொள்ளும் நானும் அது மெய்யல்ல என நீயும் உணர்வாய்


என் மகளே! 


உலகின் மொத்த அழகையும் உன் முகத்தில் கண்டுவிட்ட ஆனந்தம் என்னுள்ளே


நீ பிறந்த நொடியிலிருந்து இன்று வரை உன்னால் மயக்கப்பட்டது நான் மட்டுமே!

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...