போர்க்களத்தில்
தோட்டாக்கள் குண்டுகள்
முழங்க
என் காதில் நீ கூறிய
காதல் மட்டும் ஒலித்துக்
கொண்டிருந்தது
தேசியக்கொடியை நெஞ்சில் ஏந்தி
முன்னேறிய பொழுது தான் தெரிந்தது
என் நெஞ்சில் உன் உயிரை ஊற்றியது
எதிரிகள் என் உடலைத்தான் சிதைக்க
முடியும்
நம் காதலை அல்ல
என் தாயையும் தாய் நாட்டையும் காக்க
முன்னேறி செல்கிறேன்
ஒரு கணம் என் உயிர் காற்றில்
கலந்தால்
அதைவிட பாக்கியம் ஒன்றும் இல்லை
நித்தம் உனது மூச்சில் வாழ
உனக்கு ஒரு திருமணம் நம் காதலுக்கு
சமர்ப்பணம்
விண்வெளியில் விடிவெள்ளியாக
வானத்திலிருந்து வாழ்த்தி
கொண்டிருப்பேன் !!!
--- சின்னா

அழகான படைப்பு
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநன்றி வித்யா
ReplyDeleteமிக அருமை
ReplyDelete