இன்னொரு பிறப்பு தேவையில்லை , இந்த போராட்ட வாழ்க்கை தொடர்ந்தால். - தாயின் மனக்குமுறல் சேய்களோடு
சேய்களின் கண்களிலிருந்து பசியால் வரும் கண்ணீரை துடைக்க நினைத்து தாய் கண்ணீர் விட, அதை அறியா சேய்களும் தாயிடம் அடைந்து கொள்ள தவிப்பானது வாழ்க்கையும்
கண்ணெதிரே உயிர்விட்ட தன் கணவனின் மரணத்தை பிள்ளைகளுக்கு காட்டாமல் மறைக்கும் தாயும் எதிர்காலத்தை பற்றி அவள் மனதில் தோன்றும் வினாவும், காலத்திற்கு விடை சொல்ல வேண்டிய நிலையும் யாது?
அரவணைக்க பாசமுள்ள நெஞ்சம் மட்டும் போதும் முகம் காட்ட தேவையில்லை
எதிர்காலமே கேள்விக்குறியாய் தந்தையை இழந்த பிள்ளைகளின் ரூபத்தில்,
சமாதானம் சொல்ல வார்த்தையில்லை
விவரிக்க தருணமில்லை
விளையாட மனம் இடம் கொடுக்கவில்லை
ஆற்றல் கொடுக்க தைரியமில்லை
அறிவாய் பேச ஆற்றலில்லை
தெய்வத்தை நிந்திக்க தெரியவில்லை
தாழ்ந்து போக தன்மானம் விடவில்லை
ஆனாலும் காலமே! இந்த பசியின் கொடுமைக்கு விடை கொடேன்.
கடந்த காலத்தை மறந்து, மறையாமல் கடக்க வழி சொல்லேன்.
சொல்லும் வழியும் நேர்மையாய் அமைந்திட அமைத்து தாயேன்.
பாவத்திற்கும் வழியுண்டு ஆங்கே ஆனால் பரிதவிப்பிற்கு வழி யாதும் அறிந்திலேன்
பாசத்திற்கும் மனமுண்டு ஆங்கே ஆனால் பற்றுதலுக்கு மணமுண்டு என்பதை அறிந்திலேன்
வறுமைக்கும் அளவுண்டு ஆங்கே ஆனால் வாட்டத்திற்கு மனிதன் உண்டு என்பதை அறிந்திலேன்

No comments:
Post a Comment