Saturday, October 14, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

 


தோற்றம் பெரிதல்ல செய்யும்

 நற்செயலுக்கு, பாதை தான் வலியது

கால் பதித்த தடத்தை மறந்து போக

 அது வெறும் பாதை அல்ல என்

 வாழ்வை செதுக்கிய

 மணற்சிற்பங்கள்


 பாதை செல்லும் வரை பயணிப்போம்

 தனிமையாக, செல்கையில் இடையே

 ஒட்டிக் கொள்ளும் உறவுகள் எட்டி

 நிற்கும் நம் கடைசி நாட்களில்


வெகு தூர பயணம் எங்கே? 

தன் பெற்றோரால்

நிர்கதியாய் விட்ட - விற்ற தாத்தா ,

 பாட்டியை மீட்கவோ?


அல்லது தன் பெற்றோரை சேர்க்க

 அங்கே ஓர் இடம் தேடவோ?

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...