Monday, October 9, 2023

போர் வீரனின் காதல் by Veena Shankar

 



கவி போல் வார்த்தை சொல்ல

 நேரமில்லை இருந்தாலும் 


தவிக்கும் என் மனதிற்கும் எந்நாளும்

 வள்ளல் ஆவாயோ? 


ஆவி பிரியும் வேளையில் கூட

 என்னிடம் 


தாவி வந்து காதல் மொழி

 சொல்வாயோ?


கூவி நான் அழைக்கும் தருணத்தில் - நீ


சாவி கொண்டு என் மரணத்தை

 எதிர்ப்பாயோ?

 

அவிழ்த்து விடு என்னை உன்

 நினைவிலிருந்து


கேவி கேவி அழும் அந்த

 வேதனையையும் ஏற்பாயோ?


ஓவியமான உன்னை நினைவில்

 கொண்ட போதும் 


காவி அடங்கிய கொடியை பேண

 உன்னையும் விடுத்தேனோ?


குவிந்திருக்கும் படைகளுக்கு நடுவே -

 என் 


நாவின் சுவையறிய உன்னை

 நினைத்தேனோ?


ரவி தன் கூட்டில் ஒளிந்ததும் 


பாவி என் மனம் உன்னை

 சுற்றியதையும் மறுப்பேனோ?


நீவி விடும் உன் கரங்களுமே 


புவியில் நான் கொண்ட சொர்க்கமாய்

 மாறியதேனோ? 


சீவிய சிகை, களையும் முன்னே உன்

 பேச்சிற்கும் 


செவி மடுக்க நாட்டுக்காக நானும்

 உன்னை மறந்தேனோ?


ஏவி விட்ட கடமையோடு நான்

 களத்தில் நிற்க - மலர் 


தூவி என் சிந்தையில் எந்நாளும்

 நிற்பாயோ?


ஒளவியம் பேசும் குடிகளுக்கு நடுவே நான் - உன் 


மேவிய உடலை சீக்கிரம் வந்து தழுவுவேனோ?

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...