Wednesday, October 11, 2023

சிந்தனை துளிகள் by Veena Shankar

 


வாழ்க்கை என்பது

ஓவியமல்ல வரைந்து பார்க்க

கிறுக்கல் அல்ல அழித்து மறைக்க

விளையாட்டு பொம்மையல்ல எளிதில்

 கையாள

நிரந்தரமல்ல அடுத்தவரை குற்றம்

 சொல்ல

வெறுமை அல்ல துணிந்து நடக்க

காட்சி பொருளல்ல கண்டு களிக்க 

தேடிய செல்வம் அல்ல பிரித்து

 கொடுக்க 

அது ஓர் அனுபவம், தனி மனிதன்

 மட்டுமே 

தெரிந்து கொள்ள ,

புரிந்து நடக்க , 

தெளிந்து வாழ



சிறு வினா


என்னிடம் பிறர் இணக்கமாக இருக்க

 அவர்களை புரிந்து கொள்ளும் மனம்

 கேட்டேன். ஆனால் பிறரை புரிந்து

 கொள்ளும் புத்தியை கொடுத்து

 காரியவாதியான அவர்களிடமிருந்து

 என்னை விலக்கி வைத்தாயே

 இறைவா! ஏன்?

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...