Friday, October 20, 2023

கொலுப் பண்டிகை by Veena Shankar

 


கொலுப் பண்டிகை


புரட்டாசி அமாவாசை அன்று கொலு பொம்மைகளை சுத்தம் செய்து படியில் அமைப்பது முதல் தசமி அன்று இரவு பொம்மைகளை படுக்க வைத்து, அவற்றை காகிதம் சுற்றி பெட்டிகளில் இறக்குவது வரையும் தினமொரு நைவேத்தியம் செய்து பூ, பழம், வெற்றிலை, பாக்கு சகிதமாய் சிறப்பு பூஜை செய்து வழிபடும் பெண்களுக்கு சமர்ப்பணம். 


மேலும் தங்களால் இயலாத போதும் அடுத்தவர் வீட்டு கொலுவில் பங்கேற்கும் அனைவருக்கும் சகல ஐஸ்வர்யங்களும் தருவதே இந்த நவராத்திரி பண்டிகை. 


நவராத்திரி கொலு


படிதோறும் அழகாய் வீற்றிருப்பதும்


பெரியவன் என்ற சர்ச்சை வாரததும்


படைத்த கடவுள் முதலிலும் 


இதர ஜீவன்கள் கொடுத்த இடத்திலும்


முகூர்த்த நேரம் குறிக்காமல் நடைபெறும் திருமணமும்


படிக்குள்ளே சிரிக்கும் மலராகிய விளக்கும்


ஆளுகொன்று பூவை தரித்திருப்பதும்


மலையும் அதில் உதிக்கும் பகலவனும்


பல தடைகளை தாண்டி கொட்டும் அருவியும்  


வெயில் காணா வளரும் செடி கொடிகளும் 


அதனால் ஆங்கே நிலவும் குளிர்ச்சியும்


பகட்டான சமையல் கூடமும் 


அதை ரசித்து ருசிக்கும் கூட்டமும்


வெற்றியை நிலை நாட்டும் ராணுவ வீரர்களும்


மைதானத்தை வாகை கொள்ளும் விளையாட்டு வீரர்களும்


நாட்டை ஆண்ட அரசர்களும்


என்றுமே மதித்து பேசப்படும் தலைவர்களும்


சிறு குளமேயானாலும் அதில் வாழும் மீன்களும் 


ஜாதி , மதங்கள் தூசாகும் 


இங்கே பல மதங்கள் ஒன்று சேர்வதால் 


காடும் அதனின் வாழும் விலங்கினங்களும்


உயரப் பறக்கும் பறவைகளும்


அதுவும் ஓரிடத்தில் நிற்பதும்


விளைந்தும் சந்தைக்கு செல்லாத காய்கறிகளும் பழ வகைகளும் 


கோயிலுக்கு போக எண்ணி,


படியே கோயிலாகக் கொண்டதும்  


மடமும் அங்கே ஆக்கிரமிக்கும் பக்தர்களும் 


துளசி மாடமும் அங்கே வீற்றிருக்கும் தேவியும் 


அஷ்ட லட்சுமிகளும் இஷ்ட தெய்வங்களும்


வருடம் ஒன்றிரண்டாக சேர்த்த பொம்மைகளும்


வருபவர்கள் மகிழ்ந்து கொடுக்கும் அன்பளிப்பும்


அடுத்த வருடம் படியில் இடம் காணாமல் போனாலும் 


புதுப்படி அமைத்து அவைகளுக்கு அமர வழி கொடுப்பதும்


எல்லாவற்றிற்கும் நடுநாயகமாய் நாளொன்றாய் அமரும் முப்பெரும் தேவிகளும் 


காண வருவோர் பாடும் பாடல்களின் ஒலியும் 


வீட்டினுள் வீசவும் மறுக்குமோ தெய்வீக அலையை


சிறுவர்களுக்கு சுண்டல் பிரசாதமும்


பெண்களுக்கு பிரசாதத்துடன் தாம்பூலமும்


பெறுவதும் பாக்கியமே கொடுப்பவருக்கும் செல்வமே


கண்டு விட்ட பின் மனதில் எழும் உத்வேகமும் உறுதியும்


கொலு பொம்மைகள் போலே நாம் இருந்தால் இல்லை சர்ச்சை நம்முள்

2 comments:

  1. கோயிலுக்கு போக எண்ண.. இங்கே படியே கோயிலாய் ..wow ..well done ..

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...