Tuesday, October 3, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

 


உலகம் ஒரு நாடக மேடை, ஆனால்

 இங்கே உலகமே மேடையில்


 நடனமாடும் மங்கை என்றாலும்

 அகிலத்தை நடுங்க வைக்கும் திறமை


அபினயத்தில் நம்மை கட்டி போடும்

 திறமை


அடுப்படியில் இருந்தாலும் ஆண்களை

 ஆட்டி படைக்கும் திறமை 


ஆகாயத்தில் பறந்தாலும் பொறுப்பு

 ஏற்கும் திறமை


பெண்ணென்ற திமிரே அவள் திறமை


கால்கட்டி போட்டாலும் கண்ணசைவில்

 முடிக்கும் திறமை


கோலம் போட்ட நாள் முதல் அவள்

 கோலூச்சியதும் திறமை


வலிகள் பல கொண்ட போதிலும்

 அவள் பொறுமையும் திறமை


அருமை அருமை அவள் திறமை


அவளை அறியாதோருக்கு இல்லை

 திறமை

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...