Friday, October 20, 2023

முதுமையும் இளமையும் by Veena Shankar

 


இளமையின் துள்ளல் முதுமையிலா?


முதுமையின் பிரதிபலிப்பு இளமையிலா?


இளமையின் தோற்றம் நிஜத்திலா? 


நிஜத்தின் பிம்பம் நீரிலா?


இளமையில் கழித்தது பூங்காவிலா?


முதுமையில் கழிப்பது முதியோர் இல்லத்திலா?


இளமையில் சாதித்ததால் முதுமையில்

 இறுமாப்பா?


முதுமையின் எதிர்பார்ப்பால் இளமையில்

 சலிப்பா?


இளமையில் பேச மறந்த கதையா?


முதுமையில் பிறந்த புதுக் கவிதையா?


இளமையின் தவிப்பு ஊடலிலா?


முதுமையின் களிப்பு கூடலிலா?


இளமையின் சாட்சி முகத்திலோ?


முதுமையின் காட்சி ரசிப்பிலா?

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...