Wednesday, October 11, 2023

பெண் பிள்ளைகள் தினம் by Vidhya Nivash

 


உலக பெண்பிள்ளைகள் தினமா

 இன்று..


பெண் பிள்ளைகள் இருக்கும் வீடு

 சொர்க்கமே. 


ஆனாலும்,

இந்த படத்தில் இருக்கும் பறவை தான்

 ஞாபகம் வருது ஒவியமா? உயிருள்ள

 பறவையா? என்ற கேள்வி அத்தனை

 அழகு.ஒரு சின்ன கீறல் கூட இல்லை

 அவ்வளவு வடிவம் நல்ல மெருகேறிய

 உடல்.எல்லா பறவையும் ஒற்றை

 காலில் தான் நிற்கிறது.ஒன்றோடு

 ஒன்று சண்டை போடும் விதமாக

 கூச்சல்.நல்ல சூழ்நிலை,உணவு

 எல்லாம் இருக்கு . சிறகுகள் விரித்த

 பறவை பறக்க முடியவில்லை.

 சுதந்திரம் இருக்கு ஆனால் அந்த

 கூண்டை விட்டு வெளியேற

 முடியவில்லை.


இந்த கால பெண்பிள்ளைகளும் நவீன

 நாகரிகத்தில் வளர்க்கப்பட்டு,எல்லா

 சுதந்திரமும் கொடுத்து ஆனாலும்

 கட்டுக்கோப்பு என்ற பெயரில்

 ஒருவிதமான அழுத்தத்தில், 

 பிடிவாதமாக இருக்கிறார்களோ என்ற

 கேள்வி. அவர்களை அவர்கள்

 போக்கில் விட்டு விட வேண்டுமோ?

 எதையும் எளிதில் எடுத்து செல்லும்

 அவர்கள் சிலவற்றில் மட்டும்

 வெடிப்பது ஏன் ? புரியாத புதிராக

 இருக்கு .


அந்த பெண் பிள்ளைகளின்

 பாதுகாப்பு?

2 comments:

  1. மிகவும் சிறப்பான பதிவு. வித்யா. உண்மை. ஏன் என்ற கேள்விக்கு விடை தெரிந்தால் மட்டுமே இவ்வுலகில் பெண் பிள்ளைகள் பாதுகாப்பு பெற முடியும்

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...