Monday, October 9, 2023

எங்கே by Veena Shankar

 எங்கே? 


ரசிப்பு எங்கே அழகும் அங்கே


சிரிப்பு எங்கே துக்கமும் அங்கே


தவிப்பு எங்கே தரமும் அங்கே


சிறப்பு எங்கே தாக்குதலும் அங்கே


சிரிப்பு எங்கே சிரமும் அங்கே


களிப்பு எங்கே சிறையும் அங்கே



தவிர்ப்பு எங்கே வதனமும் அங்கே


வியப்பு எங்கே ஏமாற்றமும் அங்கே


திறப்பு எங்கே சலனமும் அங்கே


தடுப்பு எங்கே தாங்குதலும் அங்கே


பொறுப்பு எங்கே தவறுவதும் அங்கே


மறுப்பு எங்கே தூண்டலும் அங்கே


பயிர்ப்பு எங்கே தீண்டலும் அங்கே


ஈர்ப்பு எங்கே உஷ்ணமும் அங்கே

2 comments:

  1. கவிதை எங்கே அழகும் அங்கே

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிருத்திகா

      Delete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...