காலையில் உன் சிந்தை
கண்ணம்மா
என் மண்டையில்
ஓடுதடி கண்ணம்மா
பார்க்கும் பகல் எல்லம்
கண்ணம்மா
உன் போல் காட்சி தெரியுதடி
கண்ணம்மா
வாங்கும் மூச்சினிலே
கண்ணம்மா
உன் வாசம் தோன்றுதடி
கண்ணம்மா
சோற்று பருக்கை எல்லாம்
கண்ணம்மா
உன் முகம் தோன்றி மறையுதடி
கண்ணம்மா
ஆற்றில் குளிக்கையிலே
கண்ணம்மா
உன் தேகம் தெரியுதாடி
கண்ணம்மா
தூங்கும் வேலையெல்லாம்
கண்ணம்மா
கண்கள் ஏக்கம் கொள்ளுதடி
கண்ணம்மா
(கண்ணம்மாவை பாரதியிடம்
கடன் வாங்கி எழுதியது நானும் கவியாக)
----சின்னா

அழகான வரிகள்
ReplyDeleteகோடான கோடி நன்றிகள் வித்யா
Deleteஅழகான படைப்பு
ReplyDeleteநன்றி
Delete