Thursday, October 19, 2023

பல சிந்தனைகள் விடை என்ன by Vidhya Nivash

 


உலக உணவு தினம்  என்று ஒன்று கொண்டாடினர். ஆம் உணவு ரொம்ப முக்கியம் அதற்காகவே இந்த உடல் பிறந்த மாதிரி ரசித்து ருசித்து உண்பவர் பல.எந்த கட்டுப்பாடும் இல்லாமல் எந்நேரமும் உண்டு மகிழ்ந்த உலகம் இன்று எந்த பக்கம் திரும்பினாலும் உணவு கட்டுப்பாடு,உடற்பயிற்சி என.அது சரி ,சில இடங்களில் சரியான உடல் உழைப்பு இல்லாததால் அது தேவை.ஆனால் திரும்பிய இடத்தில் எல்லாம் உணவை சம்மந்தபடுத்திய பல விளம்பரங்களும், கானொளிகளும் ஏன் நிரம்பி வழிகின்றன!!

அது இருக்கட்டும்..

நவராத்திரி ஏன்

 கொண்டாப்படுகிறது!!

நம்முள் இருக்கும் அரக்க எண்ணத்தை ஒழிக்க.அதற்கு வீரம்,கல்வி,செல்வம் துணையாக..இந்த மூன்றையும் அளவுக்கு அதிகமாக கொடுத்து செல்லமாக இன்றைய தேவிகள் வளர்க்கப்படுகின்றனர்.ஆனாலும் காலகாலமாக தொடர்ந்து ஒரு கலை மட்டும் அவளிடம் அதிகமாக, விதவிதமாக,

ஒவ்வொருக்கும் பிடித்த மாதிரி எதிர்ப்பார்க்கப்படுகிறது.இரண்டு மூன்று பட்டப்படிப்பு, நவநாகரீக வளர்ப்பு கடைசியில் இதுதான்.காலகாலமாக இப்படி தாம்ப்பா என்றால் எதற்கு இந்த பட்டபடிப்பு.நேரடியாக அந்த கலையை வளர்த்து,இளமையிருந்தே செல்லமில்லாமல் வளர்க்க வேண்டியது தானே..முடிந்தால் ஆண்பிள்ளைகளுக்கும் அந்த கலையை வளர்த்துக்கொடுங்கள். 

பின்குறிப்பு - இது எல்லா குடும்பத்திற்கும் சாரா.சில நடுத்தர குடும்பத்தில் வாழையடிவாழையாக வளரும் நிலை.பலர் அதில் விதிவிலக்கு. 

கோவிலில் கையேந்தி கும்பிட்டு. அழகு என்று வர்ணித்து ரசித்தும்.வீட்டிலிருக்கும் தேவியை குத்திகுடைவதென்ன!!

நவராத்திரி கொண்டாடும் நாம் ஏன்? இதை யோசிப்பதில்லை. பெண்களுக்கு பல இடங்களில் இன்னும் அடிப்படை கல்வியே மறுக்கப்படுகின்றன.கொஞ்சம் மாற்றி யோசிப்போம், யோசிக்க வைப்போம் என்று தோழி ஒருத்தர் தன்னுடைய மகளை வைத்து பெண்களுக்கான சட்டங்களை பற்றி தினமும் போடுக்கிறார்.அர்த்தமுள்ள புது முயற்சி.

கண்டிப்பாக 64 கலைகளை வளர்க்கும் நாம்..எத்தனை பேருக்கு பெண்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகள் பற்றி தெரியும்.ஒரு பெண் ஆறு முதல் அறுபது வரை தனிமைப்படுத்தப்பட்டால் எத்தனை சட்டங்கள் உதவிப்புரிய இருக்கு என்று தெரியுமா? பலரின் போரட்டாத்தால் குறிப்பாக பல பெண்களின் முயற்சியால் உருவானது.படித்து நவநாகரீகமாக இருக்கும் பல பெண்களுக்கே தெரியவில்லை எனும் போது..அந்த சட்டங்கள் படிக்க மற்றும் புத்தகத்தோடு நின்று விடுகின்றன. 

ஒட்டுமொத்தமாக சொல்லவில்லை பலர் இதில் விதிவிலக்காக சாதித்து வருகின்றனர் அது எதுவும் பேசப்படாமல்..நடுத்தர வர்க்கத்து பெண்கள் இன்னும் அப்படியே சுமப்பது ஏன்??

8 comments:

  1. உண்மை வித்யா

    ReplyDelete
  2. நிதர்சனமான வார்த்தைகள் 👌👌

    ReplyDelete
  3. பெண்களுக்கு இன்னும் அடிப்படை உரிமை நூறு சதவீதம் கிடைக்கவில்லை என்கிறது உண்மைதான் அவங்க அவங்க வீட்ல இருக்கிற பெண்களுக்கு முதல்ல கொடுத்தாலே இந்த நூறு சதவீதத்தை நம்ம எட்டிடலாம் நன்று வித்யா

    ReplyDelete
  4. நன்றி கிருத்திகா

    ReplyDelete
  5. நன்றி சின்னா👍

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...