அதன் பிறந்த நாள் கொண்டாடி அதன்
அகவையை ஏற்ற, நம் அகவை
குறையுதே!
Google க்கு பிறந்த நாள் வாழ்த்து
என் வேலை பளுவை குறைத்தாய்
என்னை வீட்டிலேயே பாடம் படிக்க
சொன்னாய்
வழியறியா ஊருக்கு பாதை
சொன்னாய்
பொழுது போக அறிவாய் உதவினாய்
பணமாற்றம் எளிதாய் கற்று
கொடுத்தாய்
விடையறியா கேள்விக்கு விளக்கம்
தந்தாய்
உன்னால் நேரம் சிறப்பாய்
மிச்சமானது
நீ மேலும் பலவற்றை அறிமுகப்படுத்தி
நாங்கள் வீட்டிலிருந்தே வளர உதவி
செய்ய வேண்டி பிரார்த்தித்து
உன்னை வாழ்த்துகிறேன் இந்நாளில்
இந்த நாளில் பிறந்த நாள் காணும்
உன்னை அறியாத ஒரு சிலருக்காக
கடிதம் எழுத நினைத்து காகிதம் தேட,
நீ நின்றாய் என் முன்னே Gmail ஆக
திசையறியா இடத்தில் சிக்கி
கொண்டேன் இதோ இருக்கிறேன்
என்றாய் Google maps ஆக
சந்தேகத்தை உன்னிடம் பகிர்ந்தேன்,
விடையும் தந்தாய் Google ல்
மொழியில் சொல் அறிந்து எழுத
அறியா போது Google voice ஐ
பிரசாதமாக்கினாய்
நீண்ட வாக்கியங்களை இலகுவாக
தட்டச்சு செய்ய Google Document ஐ
அறிமுகம் செய்தாய்
என்னுடைய நினைவுகளை நான் படம்
பிடிக்க அதை மறுபடியும்
நினைவுபடுத்தி காட்டுகிறாய் Google
Photo வில்
என்னுடைய பொக்கிஷங்களை
சேமிக்க உதவுகிறாய் Google Drive இல்
என் பொழுது போக நீயும் Google Play
Store ஐ அளித்தாய்
படிவங்களை கையால் நிரப்ப நான்
தவிக்கையில் உதயமானாய் Google
Sheet ஆக
பண பரிவர்த்தனைக்கு வங்கி
செல்லாமல் அனுப்பவும் Google Pay
யில் வழி வகை செய்தாய்
வெளியே செல்லாமல் வீட்டிலேயே
Google Classroom மூலம் கல்வி கற்று
கொடுக்கிறாய்
எல்லாவற்றிற்கும் முன்னோடியாக பல
விசயங்களை படமாக You Tube மூலம்
காட்டுகிறாய்
உன்னால் நான் சோம்பித்
திரிந்தேனோ?
அல்லது
நீ என் நேரத்தை
மிச்சப்படுத்தினாயோ? தெரியாது.
இருவரின் மனம் இடம் மாறியது .
மனிதனும் இயந்திரமும், மொத்தத்தில்
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்.
எது முடங்கினாலும் நம் இணை
பிரியாது எதிர்காலத்தில் என்ற
நம்பிக்கையுடன், பிறந்த நாள் காணும்
உனக்கு அர்ப்பணம்