ஆசையின் விளிம்பில் பரிதவிப்பு எதற்கு?
பற்றவா? விற்கவா? பகட்டிற்கா ? தொட்டு பார்க்கவா? அணிகலனாய் பூட்டவா?
நான் பலவாறு உருமாறி வந்தாலும் என்னை உருமாற்ற நினைக்கும் பெண்கள் கூட்டம்
அடி வாங்கினாலும் அழகாய் தெரிவது பெண்களின் மேனியிலே
இல்லாதவருக்கு மகுடமாகவும் இருப்போருக்கு மகுடியாகவும்
கண்ணில் தெரிவோருக்கு அணிகலனாகவும் தெரியாதோர்க்கு இருப்பாகவும்
நினைப்போருக்கு மறதியாகவும் நினையாதோருக்கு கொடையாகவும்
பெற்றோருக்கு பரிதவிப்பாகவும் உற்றாருக்கு உறுதுணையாகவும்
அணிவோருக்கு அழகாகவும் சுகந்தமில்லாற்கு வலியாகவும் பிறக்கும் சென்னிறமே! நீ கிடைப்பதும் அரிதே சாமானியனுக்கு

super veena
ReplyDeleteநன்றி
DeleteNicely presented Sir, The poem is full of love and romance
ReplyDelete