Thursday, September 28, 2023

கார்மேகக் கூட்டம் by Veena Shankar

  


தங்கள் கவிதையில் இளைப்பாற

 கார்மேகமாய் உருவெடுக்கலாமோ?


அங்கே கார்மேகம். இங்கே 

கருந்தேகம், 

தலையை பிளக்கும் வெயில்


 கார்மேகக் கூட்டம்


உன்னை கண்டு விட்டதில் ஆனந்தமே!

குளிர் காற்று என்னை லேசாக வருட, 

உன் தேகத்தை பலவாறு சித்தரித்து

 சிந்தனையை கூட்ட, 

கலைந்து விடுவேன் என்று நீயும்

 மிரட்ட, 

சரி, சரி, உன்னை காதலிக்கிறேன்

 என்று மனதினுள் சொல்லி உன்னை

 பூட்டி கொள்ள,

அதற்குள் அவசரமாய் காற்றோடு

 காதல் கொண்டு,

மணந்தவனை கொண்டது போல்

 சென்று விட்டாயே?

இதுவும் நியாயமா?

முதலில் காதலித்த நான்

 இருக்கையில் 

அவனோடு காதல் மொழி பேசி

 என்னை ஏமாற்றி தாடி வளர்த்த

 தேவதாஸ் போல் மாற்றி விட்டாயே!


அடுத்த முறையாவது என்னை

 ஏமாற்றாமல் வந்து விடு இங்கே


உனை மறவாத காதலி இங்கே உன்

 நினைவோடு என்றும்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...