Tuesday, September 12, 2023

யாரென்று? by Veena Shankar

  


யாரென்று?


பூவும் கயலும் 

போட்டிபோடுகிறது அழகி யாரென்று?


நீரும் நிலமும் ஏங்குகிறது அவைகளை

 தாங்குவது யாரென்று?


பசுமையும் படமும் தவிக்கிறது

 காண்போரை கவர்வது யாரென்று?


படைத்தவனும் காட்சிபடுத்தியவனும்

 மிளிர்கிறார்கள் அறிவாளி

 யாரென்று?

 தெளிந்த நீரோடை என்றாலும்

 தூசியினால் மாசுபடுவதும் உண்டு


கண்ணாடி பிம்பத்தில்

தூண்டிலில் சிக்குவது பூவா? மீனா? 

முகர்ந்து பார்த்த கயலும் குனிந்து

 போனது


நிமிர்ந்து பார்த்த இலையும் உதிர்ந்து

 போனது


தெளிந்து ஓடும் நீரும்

குளிர்ந்து போனது


சாய்ந்து பார்த்த தண்டும்

சரிந்து போனது


கடந்து வந்த மண்ணும்

கலந்து போனது


தவழ்ந்து வந்த மேகம்

கரைந்து போனது


இழந்த பசுமை பெற கடந்து போனது

பூவை நுகர எந்த அறிவும்

 தேவையில்லை. ஐந்தறிவான மீன்

 என்ன ? ஆறறிவான மனிதன் என்ன?

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...