Saturday, September 23, 2023

யாரிடம் சொல்ல by Veena Shankar

 


மனதில் உள்ள வலியை யாரிடம்

 சொல்ல


ஆழ் மனதில் பதிந்த கற்பனையை

 கருத்தாக்க முடியாமல் தவிப்பதை

 சொல்லலாமா?


சொந்த வீட்டிலே பாசத்திற்கு

 கைதியாய் போனதால் பரிதவிப்பதை

 சொல்லலாமா?


என் மனதை புரிந்து கொள்ள முடியாத

 உறவுகளை பற்றி சொல்லலாமா?


நானும் என்னையே வெறுத்து மரத்துப்

 போன உள்ளத்தால் மறந்த கதையை

 சொல்லலாமா?


பகட்டுக்காக செல்வம் இருந்த போதும்

 அதை அனுபவிக்க தெரியாமல்

 துடிப்பதை சொல்லவா?


சுதந்திரமாய் திரியும் பறவையை பற்றி

 சொல்லவா?

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...