Wednesday, September 6, 2023

பேசும் படம் by Veena Shankar

 


உலகை மறந்தே கூண்டில்

 அடைபட்டான்.


 அடைபட்டும் மரத்தில்

 தொங்குகிறான்,.


 தொங்கினாலும் அலைபேசியை

 மறவாதவன் தன்னை உலகில்

 இழந்தான் ,


 தன் தனிமையை தேடி, மதி கெட்ட

 இந்த இளைய மானுடன்


தான் அடிமையானது மட்டுமல்லாமல்

 அச்சிறு பறவையையும் ஏதோ காட்டி

 மயக்கினானே?


இதில் பரிதாபத்துக்குரியவர் யார்? 


கடமை மறந்த பறவையா? எதையும்

 பொருட்படுத்தாமல் இருக்கும்

 சிறுவனா?


மனமிருந்தால் மார்க்கமுண்டு


மரமொன்று இருந்தால் பறவை உண்டு


கூண்டு என்றிருந்தால் அதில்

 அடிமையும் உண்டு


தான் அலைபேசிக்கு அடிமையானதை உணராத இந்த சிறுவன்


உலகில் சுதந்திரமான பறவையையும் நொடியில் அடிமையாக்கி விட்டானே

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...