Monday, September 25, 2023

எது இனிமை by Veena Shankar

 


 எது இனிமை


கதிரவனின் ஒளியில் பிறந்த பூவா?


அதில் ஒளிந்திருக்கும் தேனா?


தேனை மட்டும் பிரித்தெடுக்கும்

 தேனீயா?


பூ மீது அமர்ந்திருக்கும் வண்ணத்துப்

 பூச்சியா?


தேனியின் உழைப்பை சுரண்டும்

 மனிதனின் மூளையா?


இவற்றை எல்லாம் படைத்த கடவுளா?


காலத்தின் கட்டாயம் எதுவாகிலும்

 அழியாத இயற்கையின் தரிசனமும்

 அழகே!

மலருக்கு வலிக்காமல் அதன் மேல்

 சலிக்காமல் அமர்ந்த வண்ணத்து

 பூச்சி

மலரும் கனத்தது

 வண்ணத்துப்பூச்சியின் வரவால் 


வண்ணத்துப்பூச்சியும் கவர்ந்தது

 மலரின் அழகை


ஒன்றையொன்று விஞ்சிய அழகில்

 மறந்தது தங்கள் நிலை, படமானது

 மனிதனின் கரங்களுக்கு

 காலையில் மலர்ந்த பூவே உன் பெயர்

 என்ன?


பொதுப்பெயர் கொண்டு உன்னை

 அழைத்தாலும் மனிதனை போல நிறம்

 மாறுவாயோ?

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...