Wednesday, September 20, 2023

அதிகாலை by Vidhya Nivash

 


ஒருபக்கம் வெளிறிய வானம்

 மறுபக்கம் கருமை எத்தனை அழகு.

யாரோ திரைச்சீலையை பிடித்து

 விலக்க மெல்ல விடியும் பொழுது.

 உற்று பார்த்தால் நல்ல எடுப்பான

 மூக்குடன் மனிதனின் முகம்.

 பார்ப்பவர் பார்வைக்கும் ,

 சிந்தனைக்கும் மாறும் சித்திரம் வான்

 என்னும் மாயநதியில் உங்கள்

 பூதக்கண்ணாடியை கூர்மையாக்கி

 ரசிக்க இவள் விரிவாள்,

 மறைவாள்,கரைவாள் காற்றில்....


4 comments:

  1. உண்மை வித்யா. தங்கள் கருத்தோடு ஒத்து போனது என் மனம். மேலும் . என் சிந்தனையில் விழித்துக்கொண்டு படுக்கையில் இருக்கும் படம் போலவும் உணர்ந்தேன். அருமை வித்யா

    ReplyDelete
  2. கார்மேகமும் கலைத்தாயின்

    குழந்தை

    தூரிகை, வண்ணம்

    இல்லாமல்

    வானில் ஓ வம்

    தாங்கள் எழுத்து ஒவ்வத்திற்கு

    அணிகலன் போன்று

    அழகு சேர்க்கின்றது



    ---நன்று வித்யா

    ReplyDelete
  3. அருமை தோழரே .நன்றி 🙏

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...