Saturday, September 9, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

 


குஞ்சுகளின் மன ஓட்டம் இறப்பிலே 


தாலாட்டு பாட தாயில்லை


பசியாற்ற தந்தையில்லை


தேடினாலும் பக்கத்தில் உணவில்லை


காத்து நிற்க நண்பனின் கரமில்லை


அறிந்த மனதிற்கு உணர்வில்லை 


வசந்தம் வருமோ? வயிறு நிரம்புமோ? வாழ்வில் சந்ததி கிடைக்குமோ?


என்ற ஏக்கத்தில் தூக்கத்திலேயே உயிர் விட்ட பறவைக் குஞ்சுகள், நிறைவேறாத கனவுகளோடு குடும்பக் கூட்டினிலே!


கூட்டு குடும்பமாய் வளரும் பறவைகளுக்கே இந்த கதி என்றால், நமக்கு? என்ற சிந்தனையில் கனவை நினைவாக்க துடிக்கும் மானுட மனம்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...