Tuesday, September 12, 2023

வளரி by Vidhya Nivash

 


வளரி தமிழர்களின் வீரத்திற்கு

 அடையாளமான ஒன்று. அது மறந்து

 மறைந்து பல காலமாயிற்று. சில

 திரைப்படங்கள் இன்று மீண்டும்

 ஞாபகப்படுத்த,பூமராங் பற்றி அறிந்த

 பலரில் ஒரு சிலர் வளரி பற்றி

 தேடுகின்றனர்.சு. வெங்கடேசன்

 அவர்களின் தேடலில் வளரி பற்றி

 கதைகளின் கதை புத்தகத்தில்

 படித்து .இன்னும் அதன் வரலாறு

 தெரிந்தது.ஒரு காலக்கட்டத்தில்

 ஆங்கிலேயரால் முற்றிலும்

 தடைசெய்யப்பட்ட வளரியில் தப்பித்த

 இருபதிற்கும் குறைந்த வளரிகளே

 அருங்காட்சியகத்தில் இருக்க.அதன்

 பின் அவர் நண்பர் கூட்டிச்சென்று

 காட்டிய அதிசயம்.இன்றும் மதுரை

 பக்கத்துல கோவிலாங்குளம்

 கிராமத்தில் வளரியை குலசாமிக்கு

 படைக்கும் மக்கள்.வரலாற்றில்

 காணாமல் போன ஒன்று இருக்கு

 வழக்கத்தில் என்ன ஆச்சரியம்.


இதனுடன் கேட்ட ஒன்றும் சிந்திக்க

 தூண்டுது.பல சிந்தனையாளர்களும்

 கடவுள் வழிபாட்டை மறுத்தாலும்

 அவர்கள் குலதெய்வத்தை

 வணங்குகின்றனர்.அது எங்க

 முப்பாட்டன் சாமி இல்ல அவருக்கு

 பிடித்ததை வைத்து வணங்கிறோம்

 என்று சொல்லும் போது இந்த வளரி

 படையலும் ஒன்று தான்.ரொம்ப

 அழகாக சொல்லி இருந்தார். 


2 comments:

  1. மிக அருமையான பதிவு இது வித்யா. மறைந்து போன மறுக்கப்பட்ட மறைக்கப்பட்ட உண்மைகளு்ள் இதுவும் ஒன்று என நினைக்க தோன்றுகிறது. அருமை

    ReplyDelete
  2. உண்மை.நன்றி வீணா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...