Thursday, September 14, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

 


இருவரும் இணைந்திருக்க முடியாத சூழ்நிலையில் பிரிய வேண்டிய கட்டாயமேயானாலும் காலம் காட்டுவதில் மட்டும் நாங்கள் பிரிவதில்லை




பிரிவு என்றிருந்தாலும் நாங்கள் சேரும் இடங்களும் உண்டு


சேர்ந்தாலும் எங்களுக்குள் தனித்துவம் என்பது உண்டு


தனித்துவம் கொண்டாலும் கடந்தது கடந்தது தான்


கடந்து போகும் இரவும் பகலும் நாளைய வளர்ச்சிக்காகவே 


வளர்ச்சியிருந்தாலும் உள்ளிருக்கும் எங்கள் வடிவத்தில் மாற்றம் இல்லை


மாற்றம் வேண்டுமெனில் நல்லவைக்கு மட்டுமே செவி கொடுத்து, தீயவைகளுக்கு விடை கொடுங்கள் எங்களை போல்


என்ன நடந்தாலும் ஓடும் திடம் கொண்ட எங்களை போல் வாழ்ந்திடுங்கள்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...