Saturday, September 2, 2023

தொட்டிப்பாலமா! தொட்டிலா! by Vidhya Nivash

 


பாலத்தின் பெயருக்கேற்ப

 இருமருங்கிலும் பச்சை பசேல் என்று

 கண்ணுக்கெட்டிய தூரம் வரை 

நெடுநெடுவென வளர்ந்த மரங்கள் 

காற்றில் ஆட்டுவது போல் இன்பமான 

அனுபவத்தை தந்த கம்பீரமான 

தொட்டிப் பாலம். அதற்கிடையில் 

வெள்ளி நீரோடை ஒன்று நெடுவாக ,

அத்தனை தெளிந்த நீரோடு 

ஓட.ஆஹா இத்தனை அழகு எங்கு 

மறைந்து கிடந்தது.அப்படியே 

மழையில் நனைந்தபடி நடக்க, 

நினைத்தாலே சொர்க்கம்.நம் ஊரில் 

இருக்கும் இந்தசொர்க்கம்தெரியாமல் 

பல நாடுகளுக்கு நெடுநீள பாலத்தை 

காண ஓடுகிறோம்.ரொம்ப 

வருத்தமாக இருந்தது. இது போல் 

இன்னும் எத்தனை சொர்க்கம் 

கண்ணில் படாமல் மறைந்து 

கிடக்கோ.அந்தந்த ஊர் ஆட்களுக்கு 

மட்டுமே தெரியுமோ...தெரியவில்லை.

இயற்கையின் தாலாட்டில் தூங்கா 

உள்ளங்களும் தூங்க தொட்டிலில் 

மனம் புதைக்க.காற்றில் அசையா 

பாலம் பயணிப்போரின் மனதை 

அசைக்கிறதே பிரம்மிப்பில்..அற்புத 

பூமி.

   



2 comments:

  1. உண்மையாகவே தொட்டி பாலம் இருக்குமிடம் சொர்க்கம் தான். இரு மருங்கிலும் தென்னை மரங்கள் சிநேகம் கொள்ள நடக்கும் பாதை விடுத்து தெளிர்ந்த நீரும் செயற்கை உருவாக்கிய பூங்காவும் மிக அருமை தான் வித்யா. ஒரு மலையிலலிருந்து இன்னொரு மலைக்கு தண்ணிர் கொண்டு செல்ல அமைக்கப்பட்டது தொட்டிப்பாலம். அவசியம் காண வேண்டிய இடம். பக்கத்தில் அறுவிகரையும் அமைந்துள்ளது

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...